ஹோம் /நியூஸ் /கல்வி /

2000க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் உரிய தகுதியை பெறவில்லை - அமைச்சர் பொன்முடி

2000க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் உரிய தகுதியை பெறவில்லை - அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

4 ஆயிரம் நிரந்தர விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டாலும் எஞ்சியிருக்கும் 1875 காலி விரிவுரையாளர் இடங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுவார்கள் - அமைச்சர் பொன்முடி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் உரிய தகுதியை பெறவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கவுரவ விரிவுரையாளர்கள் தங்களை உரிய முறையில் தகுதிப்படுத்திக் கொண்டால் மட்டுமே பணியில் தொடர முடியும் என்றும் விளக்கமளித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டால் கவுரவ விரிவுரையாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என நேற்று கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்த நிலையில் அதற்கு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் பி.எட் கலந்தாய்வை துவங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக 4000 விரிவுரையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நியமிக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ  விரிவுரையாளர்கள் நிரந்தர விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் வரை பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்த அமைச்சர் , ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் விரிவுரையாளர் தேர்வில் வெற்றி பெறும் நபர்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில் நேர்முகத்தேர்வில் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை மதிப்பெண் வழங்கப்படும் என்றும் கூறினார்.

இதையும் வாசிக்க: NCERT கல்வி நிறுவனத்தில் 292 காலியிடங்கள் அறிவிப்பு

தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக பணியில் உள்ள 5600 நபர்களில் 2000த்திற்கும் மேற்பட்டவர்கள்  விரிவுரையாளர்களுக்கான தகுதி இல்லாமல் இருப்பதாக தெரிவித்தார். இவர்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொண்டால் மட்டுமே பணியில் தொடர முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், தற்போது 4 ஆயிரம் நிரந்தர விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டாலும் எஞ்சியிருக்கும் 1875 காலி விரிவுரையாளர் இடங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுவார்கள் என்றும் தெரிவித்தார்.

Published by:Salanraj R
First published:

Tags: Assistant Professor, Minister Ponmudi