Home /News /education /

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு!

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு!

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25-ம் தேதியும், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதியும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிடுகிறார்.

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 2-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை நடைபெற்றது.

இதில், பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 32,412 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண், அண்மையில் வெளியிடப்பட்டது. கடந்த 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 45 உதவி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்றன. இதில் ஒரு லட்சத்து 4,000 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிடுகிறார். பிளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இதையடுத்து, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25-ம் தேதியும், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதியும் தொடங்க உள்ளன.

Also see... புதிய கல்விக் கொள்கை ஏற்கும் வகையில் இல்லை - கல்வியாளர் வசந்திதேவி





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published:

Tags: BE counseling, BE students, Engineering

அடுத்த செய்தி