ஹோம் /நியூஸ் /கல்வி /

ஊரடங்கால் பள்ளிகள் திறப்பதில் தாமதம்: கற்றல், கற்பித்தல் பாதிப்பு குறித்து ஆராயக் குழு

ஊரடங்கால் பள்ளிகள் திறப்பதில் தாமதம்: கற்றல், கற்பித்தல் பாதிப்பு குறித்து ஆராயக் குழு

(கோப்புப் படம்)

(கோப்புப் படம்)

தற்போதைய சூழலில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் துவங்கப்படலாம் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கொரோனா பாதிப்பால் பள்ளிக்கல்வியில் கற்றல் - கற்பித்தல் சார்ந்து ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்து 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில்  12 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைத்து  பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில்  துவங்கும். ஆனால் தற்போதைய சூழலில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் துவங்கப்படலாம் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில், பள்ளிக்கல்வியில் கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறியவும் கால தாமதமாக பள்ளிகள் துவக்கப்படும்போது ஏற்படக்கூடிய பாதிப்புகள், முன்கூட்டியே பள்ளிகள் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், கற்றல், கற்பித்தல் பணிகளில் தற்போது ஏற்பட்டுள்ள இடைவெளி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து 15 தினங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக பள்ளிக்கல்வித்துறை, சென்னை ஐ.ஐ.டி தேர்வுத்துறை, கல்வியியல் ஆராய்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளிட்டவற்றில் இருந்து 12 பேர் கொண்ட உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு சமர்பிக்கும் அறிக்கைக்கேற்ப பள்ளிக்கல்வித்துறை     கற்றல் பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் களைவதற்கான பணிகளை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் பள்ளிக்கல்வித்துறை அமைத்துள்ள குழுவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

First published:

Tags: Department of School Education