ஹோம் /நியூஸ் /கல்வி /

தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்க கூடாது - உயர் நீதிமன்றம்

தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்க கூடாது - உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

அரியர் தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப் படவில்லை என தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள  நிலையில், தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

  கொரோனா தொற்று பரவலை அடுத்து தமிழகத்தில் அரியர் தேர்வுகள் ரத்து செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

  இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரியர் தேர்வு மாணவர்களுக்கு, இரு துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டதாகவும், அரியர் தேர்வுகளை ரத்து செய்த அரசாணையை அமல்படுத்தவில்லை என்றும் தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

  இறுதி பருவத் தேர்வுகளையும், இடைப்பட்ட பருவத் தேர்வுகளையும் நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை வகுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

  Must Read : இந்து சமய அறநிலையத் துறை நிதியில் இயங்கும் கல்லூரிகளில் இந்துகளுக்கு மட்டுமே பணி: தமிழக அரசு

  மேலும், தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Chennai High court, Examination