Home /News /education /

சென்னை பல்கலைக்கழகத்தின் பழைய பெருமை நீடிக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி - உயர் நீதிமன்றம்!

சென்னை பல்கலைக்கழகத்தின் பழைய பெருமை நீடிக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி - உயர் நீதிமன்றம்!

சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகத்தில் கூடுதல் தொழில்நுட்ப அலுவலராக பணிபுரிந்த பாஸ்கர் என்பவருக்கு, கூடுதல் நூலக உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டதை எதிர்த்து வீர பாண்டி மற்றும் செல்வி ஆகியோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் எஸ்.நக்கீரன் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
ஒரு காலத்தில் புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக விளங்கி வந்த சென்னை பல்கலைக்கழகம், இன்றைக்கு அந்த பெயரை இழந்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் கூடுதல் தொழில்நுட்ப அலுவலராக பணிபுரிந்த பாஸ்கர் என்பவருக்கு, கூடுதல் நூலக உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டதை எதிர்த்து வீர பாண்டி மற்றும் செல்வி ஆகியோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் எஸ்.நக்கீரன் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஒரு காலத்தில் புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக விளங்கி வந்த சென்னை பல்கலைக்கழகம், இன்றைக்கு அதன் பெயரை இழந்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.

முந்தைய நாட்களில், சென்னை பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றதை பெருமையாக சொன்ன காலம் போய், இப்போது அதே பெருமை நீடிக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர்.

Also read... அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்.பி எஸ்.ராமலிங்கம் வழக்கு...!

பல்கலைக்கழகத்தில் நேர்மை, அர்ப்பணிப்பு சேவையை பேணி பாதுகாக்காத அதிகாரிகளுக்கு எதிராக அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் எனவும், பொறுப்பற்ற அந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Also read... நேற்று ஒரேநாளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது...!

பல்கலைகழகத்தின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், பாஸ்கருக்கு பதவி உயர்வு வழங்கும்படி தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court

அடுத்த செய்தி