Home /News /education /

TANCET 2022 பதிவு செயல்முறை – எப்படி விண்ணப்பிப்பது..!

TANCET 2022 பதிவு செயல்முறை – எப்படி விண்ணப்பிப்பது..!

TANCET 2022

TANCET 2022

TANCET 2022 | டான்செட் (TANCET) என்பது ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைகழகத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு. இது தமிழ் நாடு மாநில அரசின் சார்பாக நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் முதுகலை படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு தான் டான்செட். எம்பிஏ, எம்டெக், உள்ளிட்ட முதுகலை படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
டான்செட் 2022 பதிவு செய்தல் பற்றிய விவரங்களை ஒரு அறிவிப்பு வழியாக சில நாட்களுக்கு முன்பே அண்ணா பல்கலைக்கழகம் தனது அதிகாரபூர்வமான இணையத்தளத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பின் படி, இந்த ஆண்டுக்கான டான்செட் பதிவு மார்ச் 30 தொடங்கி, ஏப்ரல் 18 அன்று முடிகிறது. விண்ணப்பதாரர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வமான தளமான tancet.annauniv.edu இல் பதிவு செய்து கொள்ளலாம்.

டான்செட் (TANCET) என்பது ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைகழகத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு. இது தமிழ் நாடு மாநில அரசின் சார்பாக நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் முதுகலை படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு தான் டான்செட். எம்பிஏ, எம்டெக், உள்ளிட்ட முதுகலை படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம். அண்ணா பல்கலைக்கழகம் TANCET 2022 பதிவு செயல்முறையை இரண்டு நாட்களுக்கு முன், அதாவது மார்ச் 30, 2022 முதல் தொடங்கியது. விண்ணப்பதாரர்கள் எவ்வாறு தங்கள் விவரங்களைப் பதிவு செய்யலாம் என்பது பற்றி படிப்படியான விளக்கம் வழியே இங்கே பார்க்கலாம்.

டான்செட் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய, நீங்கள் அண்ணா பல்கலைகழகத்தின் இணைப்பை மட்டுமே பயன்படுத்த முடியும். டான்செட் 2022 பற்றிய பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு இங்கே.



https://tancet.annauniv.edu/tancet/Anna%20Univeristy%20-%20TANCET.jpg

டான்செட் 2022: எப்படி பதிவு செய்வது என்ற படிப்படியான வழிமுறைகள்..

ஸ்டெப் 1: அண்ணா பல்கலைகழகத்தின் அதிகாரபூர்வமான தளத்திற்கு செல்லவும் - tancet.annauniv.edu.

ஸ்டெப் 2: இணைப்பின் முகப்புப் பக்கத்தில், TANCET 2022 registration (டான்செட் 2022 பதிவு செய்தல்) என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: கிளிக் செய்தவுடன், ஒரு புதிய பக்கம் தோன்றும்

ஸ்டெப் 4: அந்தப் பக்கத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை பிராசஸ் செய்யுங்கள்.

ஸ்டெப் 5: விண்ணப்பத்துக்கான கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்துங்கள்.

ஸ்டெப் 6: கட்டணம் செலுத்திய பின்பு, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

ஸ்டெப் 7: அப்ளிகேஷன் செயல்முறை நிறைவடைந்தது. விண்ணப்பப் படிவத்தை நீங்கள் பிரின்ட் செய்து வைத்துக் கொள்ளலாம்.

Also Read : திருநங்கைகளுக்கு கல்லூரியில் ஒரு இலவச சீட்..! - சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

டான்செட் 2022 நுழைவுத் தேர்வின் முக்கிய தேதிகள்:

  • 2022 ஆம் ஆண்டுக்கான டான்செட் பதிவு தொடங்கிய தேதி: மார்ச் 30, 2022

  • 2022 ஆம் ஆண்டுக்கான டான்செட் பதிவு முடியும் தேதி: ஏப்ரல் 18, 2022

  • 2022 ஆம் ஆண்டுக்கான டான்செட் அட்மிட் கார்டு வெளியிடப்படும் தேதி: மே 2, 2022 (இந்தத் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை)

  • 2022 ஆம் ஆண்டுக்கான டான்செட் MCA நுழைவுத் தேர்வு தேதி: மே 14, 2022

  • 2022 ஆம் ஆண்டுக்கான டான்செட் MBA நுழைவுத் தேர்வு தேதி: மே 15, 2022

Published by:Selvi M
First published:

Tags: Anna University, Education

அடுத்த செய்தி