Home /News /education /

முதல் 10 இடம் பிடித்த மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கை ஆணை வழங்கிய மருத்துவத்துறை செயலர்!

முதல் 10 இடம் பிடித்த மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கை ஆணை வழங்கிய மருத்துவத்துறை செயலர்!

ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

தவறுதலாக பொதுப்பிரிவில் விண்ணப்பித்த தகுதி வாய்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 152 பேர் மீண்டும் 7.5 % உள் இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
7.5% உள் ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 534 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இன்றைய மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கி வாழ்த்துத் மருத்துவத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், " முதல்வர் தலைமையில் நடப்பதாக இருந்த இந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக முதல்வரும், அமைச்சரும் பங்கேற்கவில்லை.

இன்று புதிதாக தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிக்கு அனுமதி கிடைத்ததன் மூலம் 10 பல் மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது.

Also read...  அரசு அலுவலர்கள் நேரடியாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிமுக கோரிக்கை!

இதனால் 7.5% இட ஒதுக்கீட்டில் 107 பல் மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 11,12 ம் தேதி முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடையும். கடந்த ஆண்டை விட 1570 இடங்கள் இந்த ஆண்டு கூடுதலாக கிடைத்துள்ளன.

தவறுதலாக பொதுப்பிரிவில் விண்ணப்பித்த தகுதி வாய்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 152 பேர் மீண்டும் 7.5 % உள் இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Health secretary, MBBS

அடுத்த செய்தி