Home /News /education /

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிவுகளை வெளியிட தடை!

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிவுகளை வெளியிட தடை!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் மருத்துவ அதிகாரிகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த மருத்துவர் ஜெயக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

    முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் மருத்துவ அதிகாரிகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் என கோரி மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த மருத்துவர் ஜெயக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    மனுவில் இந்த அரசாணை உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி ஒழுங்குபடுத்துதல் விதிகளுக்கு எதிராக உள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த அரசாணையால் அரசு மருத்துவர்களாக பணிபுரிபவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜெயக்குமார் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே கூடுதல் மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதுவரை கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரார் கோரியி்ருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, கலந்தாய்வு தொடங்கிவிட்டதால் அதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், கலந்தாய்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

    மேலும், இந்த மனு தொடர்பாக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவக் கல்லூரி தேர்வுக்குழு செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு நீபதிகள் ஒத்திவைத்தனர்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Medical colleges, Medical Courses

    அடுத்த செய்தி