புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களைப் பின்பற்றி தமிழகத்தில் மக்கள் பள்ளி என்னும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் தமிழக அரசு, புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள தயாராகிவிட்டதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாடுகளை சரி செய்வதற்கு "மக்கள் பள்ளி" என்கிற திட்டத்தை செயல்படுத்த, பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த மாநில கல்வி திட்ட இயக்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அத்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நாளை நடைபெறவுள்ள கிராமசபை கூட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் பங்கேற்று மக்கள் பள்ளி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக எட்டு மாவட்டங்களில் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி கற்றல் குறைபாடுகள் உடைய மாணவர்களை கண்டறிந்து, தன்னார்வலர்களை கொண்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிப்பது இந்த திட்டத்தின் அம்சமாகும். புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள கற்றலுக்கு தேவையான அவசர மற்றும் அவசியமான தேவைப்பாடு என்கிற பகுதியில் தெரிவித்துள்ளபடி. இந்தத் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மையான அம்சங்களுக்கு தமிழகத்தில் கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் அதில் உள்ள அம்சங்களையொட்டி புதிய திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.