ஹோம் /நியூஸ் /கல்வி /

12ம் வகுப்பு பொதுத் தேர்வு.. இன்று முதல் ஹால் டிக்கெட்!

12ம் வகுப்பு பொதுத் தேர்வு.. இன்று முதல் ஹால் டிக்கெட்!

தேர்வு

தேர்வு

தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து அனைத்து பள்ளிகளும் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படும் என தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

நடப்பாண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். தொடர்ந்து அடுத்த மாதம் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளதால், இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து அனைத்து பள்ளிகளும் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணி முதல் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Plus 2 Examination, SSLC