ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தொடக்க கல்வி பட்டயத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் சிரமமின்றி அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நடைபெறவுள்ள ஆகஸ்ட் 2022 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாம் ஆண்டு தேர்வுகள் 08.08.2022 முகல் 29.08.2022 வரையிலும் இரண்டம் ஆண்டு தேர்வுகள் 05.08.2022 முதல் 26.08.2022 வரையிலும் நடைபெறவுள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பித்திருக்கும் தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) அனைவரும் www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிந்து 28.07.2022 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
இதையும் வாசிக்க: நீட் விலக்கு மசோதா : மத்திய அரசு கேள்விகளுக்கு பதில்கள் தயார் - அமைச்சர் மா.சுப்ரமணியன்
பதிவிறக்கம் செய்வது எப்படி?
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தோன்றும் DEE Exam August 2022 - PRIVATE CANDIDATE - HALL TICKET DOWNLOAD என்பதை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்து தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.