ஒரே மாதிரியான பதில்கள்... ஒரே மாதிரியான தவறுகள்...! குஜராத்தில் நடந்த மாபெரும் தேர்வு முறைகேடு

தேர்வு மையத்தின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

news18
Updated: July 17, 2019, 3:20 PM IST
ஒரே மாதிரியான பதில்கள்... ஒரே மாதிரியான தவறுகள்...! குஜராத்தில் நடந்த மாபெரும் தேர்வு முறைகேடு
சித்திரிக்கப்பட்ட படம்
news18
Updated: July 17, 2019, 3:20 PM IST
குஜராத் மாநிலத்தில் 12-ம் வகுப்புக்கு நடந்த தேர்வில் சுமார் 1000 மாணவர்கள் ஒரே மாதிரியான பதில்கள் எழுதியது, அதில் ஒரே மாதிரியான தவறுகளை செய்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குஜராத் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சமீபத்தில் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 950-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காபி அடித்திருக்கலாம் என்று புகார் எழுந்துள்ளது.

கேள்வி ஒன்றுக்கு பலர் ஒரே மாதிரியான பதில்களை எழுதியுள்ளனர். குறிப்பாக அந்த பதிலில் இருந்த தவறு அனைத்து விடைத்தாள்களிலும் இருந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


ஜுனாகத், கிர்-சோம்னாத் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் தேர்வெழுதிய மாணவர்களே, இந்த காபி விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.

காபி விவகாரத்தில் மாட்டிய அனைத்து மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்படும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கண்ட விவகாரத்தில் தொடர்புடைய தேர்வு மையத்தின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Loading...

First published: July 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...