ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் - கல்லூரிகளுக்கு அரசு அறிவுறுத்தல்

மாணவர்கள்

நோய் தொற்று அறிகுறி உள்ள மாணவர்களை கண்டறிந்தால் உடன் அவருடன் தொடர்பிலிருந்த அனைவருக்கு RT-PCR டெஸ்ட் எடுக்க வேண்டும்.

 • Share this:
  ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

  அதில், அனைத்து கல்லூரிகளும் தங்கள் கல்லூரிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டு கருவிகள், ஆய்வகங்கள் போன்றவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

  கட்டாயமாக அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாத பணியாளர்கள் இரு தவணை தடுப்பூசிகளையும் போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போடாத பணியாளர்கள் (ஆசிரியர் மற்றும் அசிரியரல்லாப் பணியாளர்கள்) கட்டாய விடுப்பில் அனுப்படுவர்.

  தடுப்பூசி போடப்பட்டவர்களின் (மாணவர்கள்,ஆசிரியர் மற்றும் அசிரியரல்லாப் பணியாளர்கள் ) விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அரசு கோரும் போது உடன் வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

  கோவிட் - 19 சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகள் இணையவழி வகுப்புகளை தொடர நாளை (ஆகஸ்ட் 25) நடைபெற உள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

  பெற்றோர், ஆசிரியர் கழக கூட்டம் கூட்டி பெற்றோர்களின் ஆலோசனையை பெறல் வேண்டும்.

  சுகாதாரத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தடுப்பூசி போடதவர்களுக்கு கல்லூரியிலேயே போட ஏற்பாடு செய்ய வேண்டும்

  நோய் தொற்று அறிகுறி உள்ள மாணவர்களை கண்டறிந்தால் உடன் அவருடன் தொடர்பிலிருந்த அனைவருக்கு RT-PCR டெஸ்ட் எடுக்க வேண்டும்.

  மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிக்கு வருகை தர அவசியமில்லை.

  கல்லூரி வளாகத்தினுள் பயன்படாத பிளாஸ்டிக் கப்புகள், தேநீர் கப்புகள், டயர்கள், விஷ ஜந்துக்கள் தஞ்சமடையும் இடங்களை உடன் அப்புறப்படுத்த வேண்டும்.

  நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வழகளில் கண்காணிப்பு குழு அமைத்து SOP முறை பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

  சுத்தமான குடிநீர் வசதியினை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்.

  கல்லூரி துவங்குவதற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே வளாகத்தினை சுத்தம் செய்திட முன்னேற்பாடுகளை செய்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: