குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

குரூப் 2 பிரிவில் காலியாக இருந்த 1,200 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட முதல் நிலைத் தேர்வை சுமார் 5,50,000 பேர் எழுதினர்.

குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!
குரூப் 2 தேர்வு எழுதியவர்கள் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: December 17, 2018, 10:32 PM IST
  • Share this:
கடந்த மாதம் நடைபெற்ற குரூப் 2  முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நகராட்சி ஆணையர், சார் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக கடந்த நவம்பர் 11-ம் தேதி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.

குரூப் 2 பிரிவில் காலியாக இருந்த 1,199 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வை சுமார் 5,50,000 பேர் எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இன்று வெளியானது.

குரூப் 2 தேர்வு நடைபெற்று ஒரு மாத காலத்துக்குள் முடிவுகள் வெளியானது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. குரூப்-2 மெயின் தேர்வு பிப்ரவரி 23-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு தகுதி பெறுவர். ஒரு காலியிடத்துக்கு 10 பேர் என்ற அடிப்படையில் மெயின் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

காலியிடங்களின் எண்ணிக்கை 1,199 ஆக இருப்பதால் சுமார் 12 ஆயிரம் பேர் குரூப்-2 மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த தேர்வானது விரிவாக விடையளிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

Also watch
First published: December 17, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்