ஹோம் /நியூஸ் /கல்வி /

குரூப்-1 தேர்வு : விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..!

குரூப்-1 தேர்வு : விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..!

மாதிரி படம்

மாதிரி படம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு பணிக்கு ஜனவரி 20 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் ஆண்டு அட்டவணையில் குரூப்-1 தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இத்தேர்வுக்கு ஜனவரி 20ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிகலாம் எனவும் கடைசி தேதி பிப்ரவரி 19ம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முதல்நிலை தேர்வு ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் ஜனவரி 20ம் தேதி இதற்கான கல்வி தகுதிகள், கட்டண விவரம் போன்ற விவரங்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpsc.exams.net. www.tnpsc.exams.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

First published:

Tags: Group 1