Home /News /education /

பொறியியல் கலந்தாய்வு : 7.5% இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்காதவர்களுக்கு மறு வாய்ப்பு - தமிழக அரசு

பொறியியல் கலந்தாய்வு : 7.5% இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்காதவர்களுக்கு மறு வாய்ப்பு - தமிழக அரசு

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வு

www.tneaonline.org என்ற இணைய பக்கத்தில் விண்ணப்பதாரர் பெயர்/கடவுச்சொல் பதிவு செய்து தரவரிசைப் பட்டியலை பார்க்கலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    2022-23 கல்வியாண்டிற்கான பி.இ.,பி.டெக்  பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  அவர், " தற்போது வெளியிடப்பட்ட தரவரிசைப் பாட்டியலில் குறைகள் மற்றும் சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின்  தொழிநுட்பக் கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு உதவி சேவை மைய எண் 1800-425-0110- ஐ தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.

    மேலும்,  6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்திருந்தும், 7.5 முன்னுரிமை பிரிவில் விண்ணப்பிக்காத மாணவர்கள் அருகில் உள்ள பொறியியல் சேர்க்கை வசதி மையங்களில் ( TNEA FACILITATION CENTERS (TFC)) நேரில் சென்று விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும், 19ம் தேதி வரை இச்சேவை  இருக்கும் என்றும் தெரிவித்தார். சேர்க்கை வசதி மையங்களைத் ( TNEA FACILITATION CENTERS) தெரிந்து கொள்ள இந்த  இணைப்பைக் கிளிக் செய்யவும்.

    தரவரிசைப் பட்டியல்:

    பொது கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலில் 1,56,278 விண்ணப்பதாரர்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 201 விண்ணப்பத்தாரர்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 967 விண்ணப்பதாரர்களும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 1258 விண்ணப்பதாரர்களும் இடம் பெற்றுள்ளனர். 

    6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலில் 2,20,99 விண்ணப்பதாரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    அதேபோன்று, 12ம் வகுப்பு தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு  2% முன்னுரிமை அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலில் 1879 விண்ணப்பதாரர்களும், அரசு பள்ளியில் படித்த 7.5% முன்னுரிமை மாணவர்களுக்கான தொழிற்கல்வி தரவரிசைப் பட்டியலில் (7.5% RESERVATION - VOCATIONAL ) 488 விண்ணப்பதாரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    எப்படி பார்ப்பது?   www.tneaonline.org என்ற இணைய பக்கத்தில் விண்ணப்பதாரர் பெயர்/கடவுச்சொல் பதிவு செய்து தரவரிசைப் பட்டியலை பார்க்கலாம். மேலும், தரவரிசைப் பட்டியலை PDF கோப்பாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

     
    Published by:Salanraj R
    First published:

    Tags: Anna University, Engineering counselling

    அடுத்த செய்தி