நீட் தேர்வுக்கு போதிய பயிற்சி அரசு சார்பில் அளிக்கப்படவில்லை என்பதை ஏற்க முடியாது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பாரத சாரணர், சாரணியர் இயக்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பதியேற்றுக் கொண்டார்.பின்பு,செய்தியாளர்களை சந்தித்த அவர், முந்தைய ஆண்டுகளில் 16%,18%,24% என்ற அளவில் அரசுப் பள்ளி மானவர்களின் தேர்ச்சி விதம் இருந்து வந்ததது.ஆனால், தற்போது 34% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முறையான பயிற்சியளிக்கப்படுகிறது. நீட் தேர்வில் தன்னிறைவு அடையும் வரை மாணவர்களுக்கு பயிற்சி என்பது அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மாடல் பள்ளிகள் குறித்து கேள்விக்குப் பதிலளித்த அவர்,"மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் கூட நமது மாணவர்கள் ஓரளவுக்கு சேர்க்கை பெருகின்றனர. ஐஐஎம், ஐஐடி போன்ற நாட்டின் புகழ் பெற்ற நிறுவனங்களில் நமது மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. ஆத்திபூத்தார் போல் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
இதையும் வாசிக்க: 11,12-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்: செப்டம்பர் 15-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்
எனவே, மேலும் பல திறமையான மாணவர்களை கண்டறிந்து பயிற்சி கொடுக்க வேண்டும். மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறக்கூடிய போட்டித் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே மாடல் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் தற்போது 4 லட்சமாக உள்ள மாணவர் எண்ணிக்கை 10 லட்சம் ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbil Mahesh Poyyamozhi, Neet, Neet Exam, NEET Result