இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் அரசின் 'யுவா' திட்டம் - வெற்றியாளர்களுக்கு 3 லட்சம் ஊக்கத்தொகை

'யுவா' திட்டம்

இந்த திட்டமானது இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி எழுதுவதற்கு இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்கான பிரதமரின் நோக்கத்தின் ஓர் அங்கமாக செயல்படும்.

  • Share this:
    கல்வி அமைச்சகமானது பிரதமரின் ‘ இளம் எழுத்தாளர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதலுக்கான திட்டத்தினை’ தொடங்கி வைத்துள்ளது. இந்தியாவில் படித்தல், எழுதுதல் மற்றும் புத்தக கலாச்சாரம் போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் 30 வயதுக்கும் கீழான இளம் மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு பயிற்சி வழங்கும் ஒரு வழிகாட்டுத் திட்டமாகும்.

    உலகளவில் இந்திய கலாச்சாரத்தையும் இலக்கியங்களையும் கொண்டு சேர்ப்பதற்கும் இவை எளிதாக இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் வழிகாட்டப்பட்ட இளம் எழுத்தாளர்கள், புனைவு கதைகள், பயணக் குறிப்புகள், நாடகம், கவிதைகள் எழுத தேர்ச்சி பெறுவார்கள்.

    இந்த நாட்டினையும் இந்திய நூலாசிரியர்களின் படைப்பினையும் உலகம் முழுவதும் வெளிப்படுத்தும் என்பதன் விரிவாக்கம் Young, upcoming and versatile authors என்பதாகும். இந்த திட்டமானது இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி எழுதுவதற்கு இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்கான பிரதமரின் நோக்கத்தின் ஓர் அங்கமாக செயல்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த திட்டத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள் mygov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக்கொள்ளலாம். ஜூன் 1-ம் தேதியில் இருந்து ஜூலை 31-ம் தேதி வரை இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் 75 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆகஸ்ட் 15-ம் தேதி வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இதில் வெற்றியாளர்களுக்கு மாதம் 50000 என 6 மாதத்திற்கு உதவித்தொகை வழங்கப்படும். இந்த திட்டமானது கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியத் தேசியப் புத்தக அறக்கட்டளையினால் நடைமுறைப்படுத்தப்படும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: