திட்டமிட்டபடி செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ்

திட்டமிட்டபடி செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மட்டும் தினமும் பள்ளிக்கு வருகின்றனர். தனியார் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

  இந்நிலையில், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதார இயக்குநர் வெளியிட்டார். அதில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளை அனுமதிக்க அரசு உத்தேசித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்கள் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  Also read: செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

  அதன்படி, வாரம் ஒருமுறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பள்ளிக்குள் அனுமதிக்கக் கூடாது. பள்ளிக் குழந்தைகளுக்கு வைட்டமின் மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தி தரும் மாத்திரைகளை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

  இந்நிலையில், திட்டமிட்டபடி செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும்போது, தற்போது வரை தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதில் உறுதியாக இருக்கிறோம். முதல்வரும் அவ்வாறு தான் அறிவுறுத்தியுள்ளார். வகுப்புகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நாங்களும் அதனை மதிப்பாய்வு செய்து அதில் புதிதாக ஏதேனும் சேர்க்க வேண்டுமா அல்லது, சுகாதாரத்துறை வழங்கிய நெறிமுறைகளை அப்படியே பின்பற்றல் என்ற முடிவில் உள்ளோம்.

  செப்.1ம் தேதி முதல் 9, 10,11, 12ம் வகுப்புகளை தொடங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: