• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • 3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு வழங்கப்படாத இலவச லேப்டாப்... இன்றைக்குள் வழங்க உத்தரவு...!

3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு வழங்கப்படாத இலவச லேப்டாப்... இன்றைக்குள் வழங்க உத்தரவு...!

விலையில்லா லேப்டாப்

விலையில்லா லேப்டாப்

  • News18
  • Last Updated :
  • Share this:

    கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படாத நிலையில், இன்றைக்குள் வழங்க பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


    தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன.



    எனினும், கடந்த 3 ஆண்டுகளாக விலையில்லா லேப்டாப்கள் வழங்கப்படவில்லை. இதனால், தொடர்ந்து மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் போராட்டத்தை நடத்தி வந்தனர்.


    இந்த நிலையில், 2017-18 மற்றும் 2018-19-ல், பிளஸ் டூ முடித்த மாணவ, மாணவிகளுக்கு இன்றுக்குள் லேப்டாப் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து BONAFIDE எனப்படும் படிப்பதற்கான உறுதிச் சான்றிதழைப் பெற்று, இன்றுக்குள் லேப்டாப் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    கூடுதலாக லேப்டாப்கள் தேவைப்பட்டால் தேவைப்பட்டிலைப் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு டிசம்பர் 17-ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


    மாணவர்களுக்கு வழங்கப்பட்டது போகக் கூடுதலாக லேப்டாப்கள் இருந்தால் எவ்வளவு உள்ளன என்கிற விவரத்தைப் பெற்று அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


    நீங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் மேலே உள்ள குறிப்பிட்ட ஆண்டுகளில் மேல் நிலைக் கல்வி பயின்று, லேப்டாப் பெறவில்லை என்றால், இன்றைக்குள் உங்களது பள்ளியை அனுகி லேப்டாப் பெற்றுக்கொள்ள வேண்டும்.


    எனினும், பிளஸ் 2 உடன் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் மற்றும் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு லேப்டாப் கிடைக்காது.


    தற்போது நீங்கள் படிக்கும் கல்லூரியில் இருந்து BONAFIDE சான்றிதல் பெற்று, அதனை பள்ளியில் சமர்ப்பித்து லேப்டாப் பெறலாம்.


    Also See...






     


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: