பாடத்திட்டம் குறைப்பு குறித்து விரைவில் அரசாணை வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தகவல்

பள்ளி மாணவிகள்

பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார் |

 • Share this:
  கொரோனா விடுமுறைக்கு பிறகு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுதினம் பள்ளிகள் திறக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், எழும்பூரில் உள்ள பிரசிடென்ஸி மகளிர் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு நடத்தி வருவதாக கூறினார். மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு கொரோனா அச்சத்தைப் போக்கும் விதமாக மாணவர்களுக்கு 2 நாட்கள் மனநல ஆலோசனை வழங்கப்படவுள்ளதாகவும் கண்ணப்பன் தெரிவித்தார்.

  மேலும் படிக்க... உயர்கிறதா பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயது?  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: