Ed-tech companies against unfair trade practices: முறைகேடான வர்த்தக செயல்பாடுகளில் ஈடுபடும் கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்களின் பெரும்பாலான விளம்பரங்கள் தவறான தகவல்களை கொண்டிருப்பதாக Advertising Standards Council of India (ASCI) நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதையும் வாசிக்க: 600 பேரை பணிநீக்கம் செய்த பைஜுஸ் நிறுவனம்: காரணம் என்ன?
இந்நிலையில், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோகித் குமார் சிங், புதுதில்லியில் நேற்று இந்திய இணையதள மற்றும் செல்போன் சங்கத்தின் (Internet and Mobile Association of India -IAMAI)-ன் கீழ் இயங்கும் சுய ஒழுங்குமுறை அமைப்பான இந்தியா எட்-டெக் கூட்டமைப்பு (India Edtech Consortium –IEC), உடன் ஆலோசனை நடத்தினார். சுய ஒழுங்குமுறைகள், முறைகேடான வர்த்தக செயல்பாடுகளை தடுக்காவிட்டால், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த ஏதுவாக அரசே கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டியிருக்கும் என்று துறை செயலாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையும் வாசிக்க: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இந்த கூட்டத்தில் IEC உறுப்பினர்களான பைஜூஸ், வேதாந்து, அப்கிரேடு, அன்அகாடமி, கிரேட் லேனிங், ஒயிட்ஹேட் ஜூனியர் மற்றும் சன்ஸ்டோன் மற்றும் –IAMAI பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் முறைகேடான வர்த்தக நடைமுறைகள் மற்றும் தவறான தகவல்களின் பேரில் ஆர்வத்தை தூண்டும் விளம்பரங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்திய கல்வி தொழில்நுட்ப சூழல்முறையில் நுகர்வோர் நலனை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து செயலாளர் ரோகித் குமார் சிங் விவாதித்தார்.
சில விளம்பரங்கள் தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, இல்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், நுகர்வோரை நலனை பாதுகாக்கத்தக்கவகையில், தடுப்புமுறைகளை பராமரிப்பது அவசியம் என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.