தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை - ஆசிரியர்களுக்கு அமைச்சர் பாராட்டு

மாதிரி படம்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1125 மாணவர்கள் சேர்ந்து உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

  • Share this:
    தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர், 2021 மற்றும் 22ம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருப்பதாகவும் அதில் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஒரு லட்சம் பேர் சேர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    Also Read : கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் - அரசு அதிரடி உத்தரவு
    கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1,125 மாணவர்கள் சேர்ந்து உள்ளதாக அவர் குறிப்பிட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள நரிக்கட்டி பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டும் 450 புதிய மாணவர்களை சேர்த்திருப்பதாக பாராட்டு தெரிவித்த அமைச்சர், இதேபோன்று மற்ற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்களை அணுகி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    2021 மற்றும் 22ம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை அரசின் கல்வி மேலாண் தகவல் அமைப்பு இணையதளத்தில் பதிவேற்றம செய்ய வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் ஆணையிட்டார்.

    Also read : கிராமங்களில் அங்கன்வாடி, தொடக்க பள்ளிகளை திறக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் யோசனை
     கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வேலையிழந்ததால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: