ஹோம் /நியூஸ் /கல்வி /

மாதம் ரூ.750 ஊக்கத்தொகை: அம்பத்தூர் மகளிர் ஐடிஐ-ல் நேரடிச் சேர்க்கை

மாதம் ரூ.750 ஊக்கத்தொகை: அம்பத்தூர் மகளிர் ஐடிஐ-ல் நேரடிச் சேர்க்கை

அம்பத்தூர் ஐடிஐ தொழிற்பயிற்சி

அம்பத்தூர் ஐடிஐ தொழிற்பயிற்சி

பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித் தொகை ரூ.750, இலவச பஸ் பாஸ், சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இரு செட் சீருடை, மூடுகாலணி வழங்கப்படும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ( மகளிர்) பல்வேறு தொழிற்பிரிவுகளுக்கு  மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவிகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  கல்வித் தகுதி: 8ம்  வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும்  12ம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை.

  பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித் தொகை ரூ.750, இலவச பஸ் பாஸ், சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இரு செட் சீருடை, மூடுகாலணி மற்றும் சிறந்த தொழிற் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு போன்றவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தொழிற்பிரிவுகள்

  தொழிற்பிரிவுகள்பயிற்சி காலம்கல்வித் தகுதி
  கம்மியர் கருவிகள்2 வருடம்10ம் வகுப்பு தேர்ச்சி
  கோபா1 வருடம்10ம் வகுப்பு தேர்ச்சி
  செயலகப் பயிற்சி1 வருடம்10ம் வகுப்பு தேர்ச்சி
  கட்டிடப்பட வரைவாளர்2 வருடம்10ம் வகுப்பு தேர்ச்சி
  தையல் தொழில் நுட்பம்1 வருடம்8ம் வகுப்பு தேர்ச்சி

  இப்பாடங்களுக்கான நேரடிச் சேர்க்கை இம்மாதம் 30ம் தேதி வரை நடைபெறும் என்றும், விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு கல்வி சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சாண்றிதழ், ஆதார் அட்டை, 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Chennai, College Admission, ITI