NEET, JEE தேர்வுகள் எப்போது ? அறிக்கை சமர்ப்பிக்க வல்லுநர் குழுவுக்கு உத்தரவு
தற்போதைய சூழலில் நீட் மற்றும் ஜே இ இ தேர்வுகள் நடத்துவது குறித்த அறிக்கையினை நாளை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கோப்பு படம்
- News18 Tamil
- Last Updated: July 2, 2020, 3:26 PM IST
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் உடனடியாக நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த இயலுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதனால் தேர்வுகள் தள்ளி போகக்கூடிய சூழ்நிலை இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
Also read... தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பார்களா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு நீட் ஜே.இ.இ தேர்வுகளை தற்போதைய சூழலில் நடத்துவது குறித்து ஆராய குழு ஒன்றினை அமைத்துள்ளது.. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தன்னுடைய டிவிட்டரில்
பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில், தற்போதைய சூழ்நிலையில் நீட் மற்றும்JEE தேர்வுகளை நடத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமை மற்றும் வல்லுனர்கள் அடங்கிய குழுவிடம் நாளை இது குறித்த அறிக்கையை நாளைய தினம் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு நீட் ஜே.இ.இ தேர்வுகளை தற்போதைய சூழலில் நடத்துவது குறித்து ஆராய குழு ஒன்றினை அமைத்துள்ளது.. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தன்னுடைய டிவிட்டரில்
பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
Looking at the prevailing circumstances & requests received from students & parents appearing for #JEE & #NEET examinations, a committee consisting of @DG_NTA & other experts has been advised to review the situation & submit its recommendations to @HRDMinistry latest by tomorrow. pic.twitter.com/xByKLUqAIc
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 2, 2020