ஹோம் /நியூஸ் /கல்வி /

அரசு வழங்கும் நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சிகள் இன்று முதல் தொடக்கம்.. லாக் - இன் விவரங்கள் இங்கே..

அரசு வழங்கும் நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சிகள் இன்று முதல் தொடக்கம்.. லாக் - இன் விவரங்கள் இங்கே..

கோப்புப் படம்

கோப்புப் படம்

நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு E-BOX நிறுவனம் பயிற்சி அளித்த நிலையில், இந்த ஆண்டும் அதே நிறுவனம் வகுப்புகளை நடத்த இருக்கிறது.

  ஆன்லைன் வகுப்பில் சேர சுமார் 15,000 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான நீட் வகுப்பு கடந்த 1-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிக விண்ணப்பங்கள் குவிந்ததால் தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

  மேலும் படிக்க...பள்ளிகள் திறக்கலாமா வேண்டாமா என்பது பற்றி பெற்றோரிடம் இன்று கருத்து கேட்பு..

  விண்ணப்பித்துள்ள மாணவர்கள் https://neet.e-box.co.in/ என்ற இணையதளத்தில் லாக்இன் ( log in) செய்து இன்று முதல் வகுப்பில் பங்கேற்கலாம் என்றும் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு முந்தைய வாரம் வரை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  மேலும் சமீபத்தில்தான் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை தந்து கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவர்களாக வரலாம் என்ற வரலாறு படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Neet, Online class