அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு ரத்து.. தனியார் பள்ளிகள் இணையவழியில் தேர்வு நடத்தலாம்..

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு ரத்து.. தனியார் பள்ளிகள் இணையவழியில் தேர்வு நடத்தலாம்..

கோப்புப்படம்

இணையவழி வகுப்புகள் சாத்தியமின்றிப் போன அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும்... என்னென்ன பாடங்கள் குறைக்கப்படும் என பல வினாக்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை...

  • Share this:
உலகை ஸ்தம்பிக்கச் செய்த கொரோனாவால், 2020 கல்வியாண்டின் இறுதில் பள்ளிகள் மூடப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய ஜூன் மாதத்தில் கொரோனா பரவலும் தீவிரமடைந்ததால் இணையவழிக் கல்வி முறையை மத்திய, மாநில அரசுகள் பரிந்துரைத்தன. ஆனால், இணையவழி கல்வி முறையோ தனியார் பள்ளிகளுக்கு மட்டுமே ஓரளவு சாத்தியப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகள் இணையவழியில் அரையாண்டு தேர்வை நடத்திக்கொள்ள தடையில்லை என்று கூறியுள்ளார். இதன் தாக்கத்தை பின் நாட்களில் மாணவர்கள் சந்திக்க நேரிடும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

விமான இறக்கையின் மீது ஏறி அமர்ந்தவரால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்

இணையவழிக்கு மாற்றாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தொலைக்காட்சியை அனைத்து மாணவர்களாலும் பார்க்க முடியவில்லை எனக் கூறுகின்றனர் துறை சார்ந்தவர்கள்.

பாடத்திட்டம் குறைக்கப்பட்டதென்றால், எந்தெந்த பாடங்கள் நீக்கப்பட்டன? அவை அரசுப் பள்ளி மாணவர்களை முழுமையாக சென்று சேர்ந்ததா? 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்தால், இணையவழியில் ஓரளவு பயிற்சி பெற்ற தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி சந்திப்பார்கள்? போன்ற விடையறியா கேள்விகள் முன் நிற்கின்றன. இதற்கு பதில் அளிக்க வேண்டிய நிலையில அரசு உள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Vaijayanthi S
First published: