Home /News /education /

தனியார் பள்ளியிலிருந்து வேறு பள்ளி சேர விரும்பும் மாணவர்களுக்கு குட் நியூஸ்

தனியார் பள்ளியிலிருந்து வேறு பள்ளி சேர விரும்பும் மாணவர்களுக்கு குட் நியூஸ்

மாதிரி படம்

மாதிரி படம்

மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தனியார் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு சேர விரும்பும் மாணவர்கள், மாற்று சான்றிதழ் கோரும் போது கட்டண பிரச்னை உள்ளிட்ட காரணங்களை கூறி சான்றிதழை வழங்க மறுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்த்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதை எதிர்த்து ஐக்கிய மாவட்ட சுயநிதி பள்ளிகள் சங்கம் சார்பில் பிரின்ஸ் பாபு ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில், தனியார் சுயநிதி பள்ளிகள், மாணவர்களின் கட்டணத்தை நம்பியே செயல்படுவதாகவும், யார் யார் வேறு பள்ளிக்கு செல்கிறார்கள் என்ற விவரங்கள் தெரியாவிட்டால் பள்ளி நிர்வாகத்தில் பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    Also Read : ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு.. முக்கிய அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக்கல்விதுறை

    இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வேறு பள்ளிக்கு மாறுவதற்கு மாணவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளதாக கூறினார். இதற்காக மாற்றுச் சான்றிதழ் கோரி தற்போது படிக்கும் பள்ளிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அந்த விண்ணப்பங்கள் பெற்ற ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக முதன்மை கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published:

    Tags: School student

    அடுத்த செய்தி