ஹோம் /நியூஸ் /கல்வி /

GATE 2023 தேர்வுக்கான அட்டவணை வெளியீடு... முழு விவரங்கள் இதோ..!

GATE 2023 தேர்வுக்கான அட்டவணை வெளியீடு... முழு விவரங்கள் இதோ..!

கேட் 2023

கேட் 2023

GATE 2023 Exam Date : கேட் 2023 ஆம் ஆண்டுகான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஐஐடி -யில் முதுகலை இன்ஜீனியரிங் படிப்பிற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான கேட் தேர்வின் இந்த ஆண்டுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

ஐஐடி கான்பூர் இந்த ஆண்டுக்கான கேட் தேர்வு தேதிகளை அறிவித்துள்ளனர். பிப்ரவரி 4 -ம் தேதியில் இருந்து தொடங்கி 12-ம் தேதி தேர்வு முடிவடைகிறது. மேலும் காலை, மாலை என்று இரண்டு வேலைகள் தேர்வு நடைபெறும். தேர்வு அட்டவணையில் முழு விவரத்தைப் பார்ப்போம்.

கேட் 2023 தேர்வு தேதிகள்:

தேதிநேரம்பாடம்
பிப்ரவரி 4,2023காலை 9.30-12.30Computer Science and Information Technology - CS
பிப்ரவரி 4,2023பிற்பகல் 2.30-5.30Architecture and Planning - AR, Mechanical Engineering - ME
பிப்ரவரி 5,2023காலை 9.30-12.30Electrical Engineering - EE, Environmental Science and Engineering - ES, Humanities and Social Sciences - XH
பிப்ரவரி 5,2023பிற்பகல் 2.30-5.30Biomedical Engineering - BM, Chemistry - CY, Electronics and Communication Engineering - EC.
பிப்ரவரி 11,2023காலை 9.30-12.30Geology and Geophysics - GG, Instrumentation Engineering - IN, Mathematics - MA, Petroleum Engineering - PE, Engineering Sciences - XE, Life Sciences - XL
பிப்ரவரி 11,2023பிற்பகல் 2.30-5.30Aerospace Engineering - AE, Agricultural Engineering - AE, Biotechnology - BT, Chemical Engineering - CH, Ecology and Evolution - EY, Geomatics Engineering - GE, Metallurgical Engineering - MT, Naval Architecture and Marine Engineering - NM, Physics - PH, Production and Industrial Engineering - PI, Textile Engineering and Fibre Science - TF
பிப்ரவரி 12,2023காலை 9.30-12.30Civil Engineering Set 1 - CE1, Statistics - ST
பிப்ரவரி 12,2023பிற்பகல் 2.30-5.30Civil Engineering Set 2 - CE2, Mining Engineering - MN

Also Read : சென்னை ஐஐடி-யில் பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிப்பு: உடனே விண்ணப்பியுங்கள்

கேட் தேர்வுக்கான நுழைவு சீட்டை ஐஐடி கான்பூர் ஜனவரி 3 ஆம் தேதியில் இருந்து வெளியிடும் என்று தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: GATE Exam, IIT Madras