GATE 2021 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது தேர்வு எழுதும் நகரத்தை மாற்ற ஒரு வாய்ப்பு!

GATE 2021 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது தேர்வு எழுதும் நகரத்தை மாற்ற ஒரு வாய்ப்பு!

மாதிரி படம்

தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து பல கோரிக்கைகள் வந்த பிறகே தேர்வு நகரத்தை மாற்றுவதற்கான கடைசி வாய்ப்பை வழங்கியதாக GATE 2021 கமிட்டி தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கேட் ஆன்லைன் அப்ளிகேஷன் ப்ரோசெசன் சிஸ்டம் (GATE Online Application Procession System - GOAPS) தனது அதிகாரப்பூர்வ போர்டலில் பொறியியல் பட்டதாரி ஆப்டிட்யூட் டெஸ்டுக்கு (Aptitude Test in Engineering) ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தங்களது தேர்வு எழுதும் நகரத்தை மாற்றியமைக்க ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. டிசம்பர் 15ம் தேதி வரை தேர்வு எழுதும் நகரத்தில் திருத்தம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றங்களைச் செய்ய அவர்கள் GATE அதிகாரப்பூர்வ தளத்தை, அதாவது gate.iitb.ac.in என்ற இணயத்தளத்தை பார்வையிட வேண்டும்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT) பம்பாய் இந்த நுழைவுத் தேர்வினை ஒழுங்கமைத்து வருகிறது. மேலும் தேர்வு நடத்தும் அதிகாரப்பூர்வ வலைத்தளம், GATE 2021-க்கான விண்ணப்ப படிவங்களில் ஏதேனும் திருத்தங்களைச் செய்ய வேண்டுமானால் வேட்பாளர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்றும் கூறியுள்ளது. இது பற்றி வலைத்தளத்தின் முகப்புப்பக்கம் பின்வரும் வாக்கியங்களை சுட்டிக்காட்டியுள்ளது. அதில் "GOAPS போர்ட்டலில் 15.12.2020-க்குள் இலவச செலவில் தேர்வு எழுதும் நகரத்தை (வெற்றிகரமாக பதிவுசெய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு மட்டும்) மாற்றுவதற்கான கடைசி மற்றும் இறுதி வாய்ப்பு" என குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து பல கோரிக்கைகள் வந்த பிறகே தேர்வு நகரத்தை மாற்றுவதற்கான கடைசி வாய்ப்பை வழங்கியதாக GATE 2021 கமிட்டி தெரிவித்துள்ளது. எனவே தேர்வுக்கான லிங்க் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட கமிட்டி , "கொரோனா வைரஸ் தொற்று நிலைமை மற்றும் பதிவு செய்யப்பட்ட வேட்பாளர்களில் பெரும் பகுதியினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, GATE 2021 குழு ஆன்லைன் போர்ட்டல் GOAPS ஐ மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது" என்று அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளது.

Also read... மாஸ்டர் திரைப்படத்தை ஒரே நாளில் எல்லா மொழிகளிலும் திரைக்கு கொண்டுவரும் பணிகள் தீவிரம்!

அதன்படி, இந்த போர்டல் டிசம்பர் 14ம் தேதி  திறக்கப்பட்டது. மேலும் இது ஒரு நாள் மட்டுமே செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இனி வேறு எந்த மாற்றத்திற்காகவும் கோரிக்கை ஏற்கப்படாது என்பதால், விண்ணப்பித்தவர்களுக்கு இதுவே சாத்தியமான கடைசி விண்டோ என நிறுவனம் தெரிவித்துள்ளது. GATE 2021 அட்மிட் கார்டை சரியான நேரத்தில் உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், மையங்களை விரைவாக ஒதுக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த அறிவிப்பு வலியுறுத்தியது.

பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை ஆகிய இளங்கலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், மற்றும் கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் ஆகிய முதுகலை நிலை படிப்புகளில் சேர விரும்புபவர்களை GATE 2021-ஐ நடத்துவதன் மூலம் ஷார்ட்லிஸ்ட் செய்வதை ஐ.ஐ.டி பம்பாய் நோக்கமாகக் கொண்டுள்ளது. தகவலின் படி, GATE நுழைவுத் தேர்வு அனைத்தும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: