கேட் தேர்வு 2021க்கான விடை தாள் வெளியானது - தவறான விடைகளை தெரிவிக்கலாம்!

கேட் தேர்வு 2021க்கான விடை தாள் வெளியானது - தவறான விடைகளை தெரிவிக்கலாம்!

மாதிரி படம்

கேட் நுழைவுத்தேர்வை பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் அல்லது சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று ஆண்டுதோறும் நடத்தும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ.,எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 25 பாடப் பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

கேட் நுழைவுத்தேர்வை பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் அல்லது சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று ஆண்டுதோறும் நடத்தும். மேற்படிப்பிற்காக மட்டுமின்றி, இந்தியன் ஆயில் நிறுவனம், ஓ.என்.ஜி.சி., கெய்ல், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் உயர் அதிகாரி பதவிக்கு கேட் தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன.

இந்த நிலையில் கேட் 2021 தேர்வானது பிப்ரவரி 14 அன்று நடத்தப்பட்டது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) பம்பாய் இந்த தேர்வை நடத்திய நிலையில், கேட் 2021 தேர்வுக்கான விடை தாளை தற்போது வெளியிட்டுள்ளது.

ஐ.ஐ.டி கேட் 2021 தேர்வு எழுதியவர்கள் இப்போது அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.gate.iitb.ac.in என்ற இணைப்பை கிளிக் செய்து விடை தாளை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த விடை தாளில் ஏதேனும் தவறு இருந்தாலும் மாணவர்கள் ஆட்சேபனைகளை எழுப்பலாம் என கூறப்பட்டுள்ளது. மார்ச் 2 முதல் மார்ச் 4 வரை ஆதாரத்துடன் தவறுகளை சுட்டி காட்டி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஆட்சேபனைக்கு ரூ .500 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தவறுகள் ஒரு குழுவால் பரிசீலிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். அவை சரியாக இருந்தால் விடை தாள் திருத்தப்பட்டு, மார்ச் 18க்குள் வெளியிடப்படும். மேலும் அதற்கான விண்ணப்ப கட்டணமும் திருப்பி வழங்கப்படும். இருப்பினும், சரியான பதிலை தவறாக விண்ணப்பித்தால்கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது.

தவறான பதில்களுக்கான ஆட்சேபனைகளை விண்ணப்பிப்பது எப்படி?

ஸ்டெப் 1: www.gate.iitb.ac.in என்ற லிங்கை கிளிக் செய்யவும், இப்போது அதிகாரப்பூர்வ GOAPS வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

ஸ்டெப் 2 : பின்னர் ‘Contest Answer Key’ டேப்பை கிளிக் செய்ய வேண்டும்

ஸ்டெப் 3: இப்போது கட்டணம் செலுத்த வேண்டிய, பகுதி தோன்றும். இப்போது ஆன்லைன் மூலம் ரூ .500 செலுத்த வேண்டும் (ஒரு தவறுக்கு ரூ.500 ஆகும்).

ஸ்டெப் 4: நீங்கள் தவறாக நினைக்கும் கேள்வி எண்ணை குறிப்பிட்டு, அதற்கான விளக்கத்தை எழுதி, துணை ஆவணங்களையும் இணைக்கவும்.

ஸ்டெப் 5: அனைத்து விவரங்களையும் கொடுத்த பிறகு சப்மிட் பட்டனை அழுத்தவும்.

ஸ்டெப் 6: எதிர்கால பயன்பாட்டிற்காக நீங்கள் அதை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Also read... துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது - நீதிமன்றம் உத்தரவு!

கேட் 2021 இன் தேர்வின் மார்ச் 22, 2021 அன்று அறிவிக்கப்படும். இந்த தேர்வில் நெகடிவ் மதிப்பெண்கள் இருக்கிறது. எனவே மொத்த மதிப்பெண்களைப் பெறுவதற்கு சரியான விடைகளுக்கான மொத்த மதிப்பெண்களிலிருந்து தவறான பதிலுக்கான நெகடிவ் மதிப்பெண்களை கழித்து மொத்த மதிப்பெண்களை கணக்கிட வேண்டும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: