முகப்பு /செய்தி /கல்வி / கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

கேட் நுழைவுத் தேர்வு

கேட் நுழைவுத் தேர்வு

  • Last Updated :

2019-ம் ஆண்டிற்கான கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். 

மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.), நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (என்.ஐ.டி.) மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்.சி.) உட்பட நாட்டின் முன்னணி அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்காக தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி தேர்வே, ‘கேட்’ (GATE)எனப்படும் `கிராஜுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங்’.

எம்.இ., மற்றும் எம்.டெக்., படிப்புகளுக்கான தகுதி தேர்வாக மட்டுமே மாணவர்கள், இத்தேர்வை கருதக்கூடாது. ஏனெனில், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அரசு நிறுவனங்களுக்கு இணையாக கருதப்படும், பி.எஸ்.யு.’ எனப்படும் பப்ளிக் செக்டார் அன்டர்டேக்கிங்’ நிறுவனங்களில் குரூப் - ஏ பிரிவு பணிகளில் சேர நேரடி தகுதியினை பெறுவார்கள்.

பொறியியல், தொழில்நுட்பம் அல்லது கட்டுமான துறைகளில் இளநிலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அறிவியல், கணிதம், புள்ளியியல் அல்லது கணினி துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்களும் இத்தேர்வை எழுதலாம். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பெங்களூரின் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸ் கல்வி நிறுவனமும் இரண்டுக்கும் மேற்பட்ட ஐஐடிக்களும் சேர்ந்து இத்தேர்வை நடத்துகின்றன.  2019-ம் ஆண்டிற்கான கேட் தேர்வு தேதிகளை  சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த கேட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாள் இன்றுடன் முடிவடைகிறது. இதற்குமேல் வரும் விண்ணப்பங்களுகள் தாமதமான விண்ணப்பமாக கருதப்பட்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதல் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.2000, பட்டியிலினத்தவர்கள் ரூ.1250 கட்டவேண்டும்.

top videos

    இந்தத் தேர்வை ஆன்லைனில்  https://appsgate.iitm.ac.in/ என்ற வலைத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    First published:

    Tags: GATE Exam, GATE last date, Online application