முகப்பு /செய்தி /கல்வி / 12வது முடிச்சாச்சு... வீடியோ கேமில் ஆர்வம் கொண்டவரா உங்கள் பிள்ளை- இந்தப் படிப்பைப் பற்றித் தெரிஞ்சுக்கோங்க

12வது முடிச்சாச்சு... வீடியோ கேமில் ஆர்வம் கொண்டவரா உங்கள் பிள்ளை- இந்தப் படிப்பைப் பற்றித் தெரிஞ்சுக்கோங்க

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Gaming Courses : விளையாடிக்கொண்டே வேலையும் செய்யலாம். விளையாட்டே வாழ்க்கையாக மாறிவிடும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் லட்சங்களில் சம்பாதிக்கும் வாய்ப்பை கேமிங் படிப்பு கொடுக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இன்று அதிகப் படியான இளைஞர்கள் தலைகளில் ஓடிக்கொண்டிருப்பது விளையாட்டு தான். மைதானத்தில் இறங்கி விளையாடிய காலம் மாறி செல்போனில் போர்களையே நடத்தி வருகின்றனர். அதுவும் இப்போது எல்லாம் மெய்நிகர் என்ற வளர்ச்சி வந்தது தான் பேச்சு... மெய்யா அதற்கு நிகரான பொய்யா என்று தெரியாத அளவு ஒரு கேமிங் உலகத்தை உருவாக்கி வருகின்றனர். கேம்கள் இல்லாத போன்கள் இல்லை என்ற அளவிற்கு எல்லா போன்களிலும் இருக்கின்றன.

காலை முதல்  இரவு தூங்கும் வரை கேமே கதி என்று கிடக்கிறான். 12 வது முடித்துவிட்டு என்ன செய்யப் போகிறான் என்று நினைத்து பயப்படும் பெற்றோர்களே.. கவலை வேண்டாம்.

ஒரு கேம் என்று எடுத்துக்கொண்டால் அதன் உள்ளே நிறைய வேலைகள் இருக்கின்றது. அதன் கதையை உருவாக்குவது, அதற்கு உருவங்கள் கொடுத்து, அதை டிஜிட்டல் திரையில் வரைவது, அதன் நகர்வுகளை சேர்ப்பது, அந்த உருவம் தாவ, ஓட, குதிக்க, சண்டையிட என்று எல்லாவற்றிற்கும் விதிகளை வகுக்க வேண்டும், அதற்கு அனிமேஷன் சேர்க்க வேண்டும். அந்த கேம் நடைபெறும் தளத்தை கிரௌண்ட் பிளான் போட வேண்டும். ஒவ்வொரு லெவெல்களாக கடினத்தன்மையையும், கதையின் நகர்வையும் சேர்க்க வேண்டும். அதை ப்ரோக்ராம் செய்ய ஒருவர், அதை டெஸ்ட் செய்ய ஒருவர் என்று கேமிங் உலகத்துள் வேலைகள் கொட்டிக்கிடக்கின்றன.

கேமிங் உலகத்தில் மாணவர்களுக்கு என்ன விருப்பமோ அதிலேயே ஸ்பெஷலிஸ்ட் ஆகி அவரது புதிய கேமை உருவாக்க முடியும்.

12th Result: ரிசல்ட் பார்க்க முடியவில்லையா..? மார்க் தெரிய எளிமையான வழி இதோ...

ஓவியம்:

ஒரு விளையாட்டின் கதாபாத்திரங்களை நம் மனதிற்குப் பதியவைப்பது அதன் தோற்றம் தான். அதை வடிவமைப்பவர் ஆர்ட்டிஸ்ட். அந்த கதைக்களத்தை வடிவமைப்பவர் டிசைனர். இதற்கு ஓவியத்திறமையும், முப்பரிமாண நோக்கும் தேவை. அதை வளர்க்க நுண்கலை படிப்பு எனப்படும் fine arts உள்ளது. தமிழகத்தில் இதற்கென தனி கல்லூரிகளே உள்ளன. BSc விசுவல் ஆர்ட்ஸ் என்ற படிப்பும் இதற்கு உதவக்கூடிய ஒன்றாகும்.

அனிமேஷன்:

BSc மல்டிமீடியா இன் அனிமேஷன் மற்றும் கிராஃபிக்ஸ், BSc அனிமேஷன் மற்றும் VFX படித்தால் விளையாட்டில் வரும் அனிமேஷன், படங்களில் வரும் அனிமேஷன்களை உருவாக்கும் பணியில் சேரலாம். கிராபிக் டிசைனர், அனிமாட்டோர் என்பது இவர்களது பெயர்கள்.

ப்ரோக்ராமிங்:

கேம் ப்ரோகிராம்கள் பொறுத்தவரை அது தான் அந்த விளையாட்டின் இயங்கு நாடி. அதை உருக்க விரும்பினால் B.tech கணினி அறிவியல் படித்தால் பெரிதும் உபயோகமாக இருக்கும் . இளங்கலை கணினி அறிவியல் முடித்துவிட்டு, கேம் ப்ரோக்ராம்மிங்க்கான டிப்ளமோவும் படிக்கலாம். பல கல்வி  இணையதளங்களில் இந்த டிப்ளோமாக்கள் உள்ளது. எளிதாக வீட்டில் இருந்தே கற்றுக்கொள்ளலாம்.

எடிட்டிங்:

BSc விசுவல் கம்யூனிகேஷன் படித்தால் அந்த கேம் வீடியோ எடிட் செய்யும் பணிக்கு பொருத்தமாக இருக்கும்.

இது போக கேம் டிசைன், ப்ரோக்ராம்மிங், டெவெலப்மென்ட், தயாரிப்பு, எடிட், என்று எல்லாவற்றிக்கும் தனித்துவமான டிப்ளமோக்கள் இருக்கின்றன.

வளர்ந்து வரும் 3D டெக்னோலஜி உலகில், விளையாட்டில் வரும் 3D அமைப்புகளுக்கும், விளையாட்டுக்களுக்கும் உருவாக்கப்படும் தனித்துவமான கதைகளை எழுத என்றே அட்வான்ஸ்டு டிப்ளமோக்கள் இருக்கின்றன. அவற்றை கற்கும் பொது நிபுணத்துவம் கூடும்.

இவை எல்லாம் எங்கோ தூரத்தில் வெளிநாட்டில் தான் படிக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். இந்தியாவிலேயே, தமிழ்நாட்டிலேயே இந்த படிப்புகள் எல்லாம் உள்ளன. டிப்ளமோக்கள், உடெமி(Digi Udemy) போன்ற கல்வித் தளங்களில் உள்ளன.

இதனால் விளையாடிக்கொண்டே வேலையும் செய்யலாம். விளையாட்டே வாழ்க்கையாக மாறிவிடும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் லட்சங்களில் சம்பாதிக்கும் வாய்ப்பை கேமிங் படிப்பு கொடுக்கும். விளையாட்டை வாழ்வின் வெற்றிப்படியாக மாற்ற வாழ்த்துக்கள்.

First published:

Tags: Game Applications, Higher education