Home /News /education /

முழுநேர முனைவர் பட்டம்: ரூ.1 லட்சம் கல்வி ஊக்கத்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

முழுநேர முனைவர் பட்டம்: ரூ.1 லட்சம் கல்வி ஊக்கத்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

மாதிரி படம்

மாதிரி படம்

ஒன்றுக்கும் மேற்பட்ட கல்வி உதவித் தொகை / நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன் பெறுபவராக இருத்தல் கூடாது.

    2021-22ம் ஆண்டில் முழுநேர முனைவர் பட்டம் மேற்கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்தவ ஆதிதிராவிடர் கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ்  விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்:

    ஆண்டுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

    பகுதிநேர ஆராய்ச்சி மாணவர்கள் இத்திட்டத்தை கீழ் பயன்பெற இயலாது.

    குடும்பத்தின் ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    முதுகலை பட்டப்படிப்பில் 50% விழுக்காடு பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

    1600-க்கும் அதிகமான எண்ணிக்கை அளவில் கல்வி ஊக்கத் தொகை வழங்கக்கோரி விண்ணப்பங்கள் வரப்பெறும் நேர்வில் மாணாக்கர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 1600 பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

    ஒன்றுக்கும் மேற்பட்ட கல்வி உதவித் தொகை / நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன் பெறுபவராக இருத்தல் கூடாது. மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதியுதவி அல்லது பிற திட்டங்களில் பெறும் நிதியுதவி இவற்றில் அதிக பயன்தரும் திட்டத்தை தேர்ந்தெடுக்க அனுமதிக்கலாம். மாணாக்கரின் விருப்புரிமையின் அடிப்படையில் குறைவான பயன் தரும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிதி உதவியை உரிய கணக்குத் தலைப்பில் அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும்.

    விண்ணப்ப படிவத்தில் எவ்வித கலமும் விடுபடாமல், முழுமையாக பூர்த்தி செய்து இவ்வலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10.06.2022 அன்று மாலை 5.45 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

    10.06.2022 க்கு பிறகும், விளம்பரம் வெளியிடுவதற்கு முன்னரும், பெற்ற விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் எனில் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, ஆணையர், ஆதிதிராவிடர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை - 600005.

    முழு நேர முனைவர் பட்டப் படிப்புப் பயில பல்கலைக் கழகத்தால் ஆராய்ச்சிக் காலம் குறிப்பிடப்பட்ட பதிவு அனுமதிக் கடிதம் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். Bonafied சான்றிதழ் மட்டும் இணைக்கப்பட்டிருந்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கான விண்ணப்ப படிவத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அமைச்சகத்தின் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Scholarship

    அடுத்த செய்தி