அக்டோபர் 1 முதல் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் - தமிழக அரசு

அக்டோபர் 1 முதல் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் - தமிழக அரசு
கோப்பு படம்
  • News18
  • Last Updated: September 24, 2020, 4:26 PM IST
  • Share this:
அக்டோபர் 1-ம் தேதி முதல் மாணவர்கள் விரும்பினால் பள்ளிகளுக்குச் செல்லலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கனவே மத்திய அரசு ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பெற்றோர் அனுமதியுடன் மாணவர்கள் தங்கள் பாடங்களில் உள்ள சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள பள்ளிகளுக்கு வரலாம் என்று அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி அதேபோல தமிழகத்திலும் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பாடங்களில் உள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள பள்ளிகளுக்கு வரலாம் என்றும் அறிவித்துள்ளது.

அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் போது 50 சதவிகித ஆசிரியர்களை அனுமதிக்கலாம் என்றும் ஏற்கனவே அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகளை மட்டுமே திறக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வழிகாட்டு நெறிமுறைகள்:

இரண்டு பிரிவுகளாக வகுப்புகளை  பிரித்து நடத்தலாம் என்று வகுப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது அதன்படி ஒரு பிரிவு மாணவர்களுக்கு திங்கள் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் இரண்டாவது பிரிவு மாணவர்களுக்கு செவ்வாய் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு வர வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Read... ஊரடங்கு காலத்தில் காவேரி ஆற்றில் நீரின் தரம் உயர்ந்துள்ளது - மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை..பள்ளிகள் திறப்பதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு பள்ளிகளை தூய்மைப்படுத்த வேண்டும் பள்ளிகளில் மாணவர்கள் 6 அடி இடைவெளி விட்டு பள்ளிகளில் அமர வைக்க வேண்டும் மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்குள் வருவதற்கு முன்பு அவர்களுடைய உடல் வெப்பநிலையை சோதனை செய்திட வேண்டும்.

வருகைப் பதிவேட்டிற்கான பயோ மெட்ரிக் பதிவு முறையை பயன்படுத்துதல் கூடாது. பள்ளிகளுக்கு வரக்கூடிய ஆசிரியர்கள் மாணவர்கள் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துவதற்கான கிருமிநாசினி சோப் போன்றவற்றை பள்ளிகளில் வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
First published: September 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading