இந்த ஏப்ரல் மாதத்தில், கல்வி சார்ந்த மிக முக்கியமான அறிவிப்புகள் வெளியாக இருக்கின்றன. குறிப்பாக, முதல் முறையாக நடத்தப்பட உள்ள ஒற்றை கல்லூரி நுழைவுத் தேர்வு, 30 லட்சம் மாணவர்களுக்கு தொடங்க உள்ள சிபிஎஸ்இ தேர்வுகள், தேசிய அளவிலான பொறியியல் நுழைவுத் தேர்வு - ஜேஇஇ மெயின்ஸ் ஆகியவை இதில் அடங்கும். ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட உள்ள முக்கிய தேர்வுகள் குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சியூஇடி மாணவர் சேர்க்கை :
நாட்டிலேயே முதல் முறையாக மத்திய பல்கலைக்கழகங்களுக்கான ஒரே நுழைவுத் தேர்வு (சியூஇடி) நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்பதற்கான பதிவு நடவடிக்கைகளை தேசிய திறனாய்வு முகமை (என்டிஏ) கடந்த 6ஆம் தேதி தொடங்கியது .
ஜேஇஇ மெயின்ஸ் அனுமதிச்சீட்டு :
ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு முதல் செஷனுக்கான அனுமதிச்சீட்டுகள் ஏப்ரல் 3ஆவது வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. பொறியியல் நுழைவுத் தேர்வின் முதல் அமர்வு என்பது ஏப்ரல் 21, 24, 25, 29 மற்றும் மே 1, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு இரண்டு அமர்வுகளாக நடைபெற உள்ளது. முதல் அமர்வு தேர்வுக்கான பதிவு என்பது ஏப்ரல் 5ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. அதற்குப் பிறகு இரண்டாம் அமர்வுக்கான விண்ணப்ப நடவடிக்கை தொடங்கும். இரண்டாம் அமர்வு தேர்வு என்பது மே 24, 25, 26, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
சிஐஎஸ்சிஇ வாரிய தேர்வுகள் :
சிஐஎஸ்சிஇ கல்வி வாரியத்தில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி ஜூன் 13ஆம் தேதியுடன் நிறைவுபெற உள்ளது. இரண்டாம் பருவத் தேர்வுகள் 1.5 மணி நேர கால அளவில் நடைபெற உள்ளன. கேள்வித் தாள்களைப் படித்துப் பார்ப்பதற்காக மாணவர்களுக்கு 10 நிமிடங்கள் வழங்கப்படும். தேர்வு நடைபெறும் நாளில் நண்பகல் 1.50 மணியளவில் மாணவர்களுக்கு கேள்வித் தாள்கள் வழங்கப்படும்.
Also Read : அழகற்ற பெண்கள் கூட திருமணம் செய்ய வரதட்சணை உதவுகிறதாம்... நர்சிங் பாட புத்தகத்தால் சர்ச்சை
சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் :
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்க உள்ளன. இரண்டு வகுப்புகளுக்குமே தேர்வு என்பது காலை 10.15 மணிக்கு தொடங்கும். கேள்வித் தாள்களை படிப்பதற்காக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.
Also Read : புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பை பிரதிபலிக்கும் தமிழக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்
நீட் தேர்வு அறிவிக்கை :
நீட் தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6 தேதி முதல் தொடங்கியது. ஏப்ரல் 6 தேதி முதல் மாணாக்கர்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 06-5-2022.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.