Home /News /education /

கர்நாடக இசை மேதைகள் முதல் பார்கின்சன் நோயாளிகளுக்கான புதுமைப்பித்தன் வரை, #BYJUSYoungGenius2 இன் எப்பிசோட் 2 கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய ஒன்று

கர்நாடக இசை மேதைகள் முதல் பார்கின்சன் நோயாளிகளுக்கான புதுமைப்பித்தன் வரை, #BYJUSYoungGenius2 இன் எப்பிசோட் 2 கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய ஒன்று

BYJU’S Young Genius Season 2

BYJU’S Young Genius Season 2

BYJU'S Young Genius | பெங்களூருவைச் சேர்ந்த 14 வயது சிரி கிரிஷ் தனது புதிய ராகமான நமோவீனபாணியைப் பாடியபோது, மகாதேவன் அசந்து போனார். அவர் தனது சொந்த கர்நாடக ராகத்தை உருவாக்கிய இளம் பெண் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.

    கடந்த வாரம், தொடர்ச்சியாக இரண்டு முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்ற, 14 வயதான தஜமுல் இஸ்லாம் மற்றும் ஒலிம்பியாட் மற்றும் ஆப் டெவலப்பர் விருது வென்ற 14 வயதான ஹர்மன்ஜோத்  சிங் ஆகியோரின் சாதனைக் கதைகளுடன் BYJUS Young Genius 2, தனது முதல் எப்பிசோடைத் தொடங்கியது.

    இந்த வாரம், நாட்டின் இருவேறு பகுதிகளான பெங்களூரு மற்றும் புனேவிலிருந்து, பல வழிகளில் தங்கள் திறமைகளால் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இளம் மேதைகளைப் பற்றிய அசத்தலான கதைகளைப் பற்றி நாம் பார்க்கப்போகிறோம். அனைத்திற்கும் மேலாக, #BYJUSYoungGenius 2 குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தி, இந்திய இளைஞர்கள் தங்கள் சொந்தக் கனவுகளை நிறைவேற்றவும், இலக்குகளை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடரவும் தூண்டுகிறது.

    கர்நாடக இசை மேதைகளான ராகுல் வெள்ளல் மற்றும் சிரி கிரிஷ்

    இப்போது, 14 வயது கர்நாடக இசைக் கலைஞரான ராகுல் வெள்ளல் உடன் தொடங்கி, இந்த வாரம் இடம்பெற்ற குழந்தை மேதைகளைப் பற்றிப் பார்ப்போம். அவர் தனது ஆறரை வயதில் மேடையில் கச்சேரி செய்யத் தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் வெறும் இரண்டரை வயதிலேயே வீட்டில் ஒலிக்கும் பாடல்கள் அனைத்தையும் அவரால் கச்சிதமாக ரிப்பீட் செய்ய முடிந்தது. 

    இதுவரையில் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய ஆறு மொழிகளில் வெள்ளல் பாடியுள்ளார். அவரைப் பொறுத்தவரையில், இம்ப்ரூவிசேஷன் என்பது கர்நாடக இசையின் இதயமாக விளங்குவதோடு அதற்கு அழகும் சேர்க்கிறது, இதுதான் இந்த இளம் மேதை தொடக்கத்தில் இருந்தே பின்பற்றும் வாழ்க்கைத் தத்துவமாகும்.

    பத்தாண்டுகால பயிற்சிக்குப் பிறகு வெள்ளல் பல்வேறு விருதுகளை வென்று பல அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார். சிறந்த இசையமைப்பாளரான குல்தீப் M பையுடன் இணைந்து, ஒரு இசை வீடியோவில் பணியாற்றியபோது, தனது கர்நாடக குரலிற்காக (2018-2020) இவர் சண்முகானந்தா M S சுப்புலக்ஷ்மி ஃபெலோஷிப் 2018 பெற்றார், மேலும் Disney இன் அனிமேஷன் திரைப்படமான "தி லயன் கிங்" (தெலுங்கு பதிப்பு) திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான சிம்பாவிற்குத் தனது குரலில் பாடியுள்ளார். 

    மறுபுறம், வெள்ளள், தனது இசைப் பயணத்திலிருந்து பின்வாங்குவதாக இல்லை. கர்நாடக இசையை தொடர்ந்து பாடி, உலகம் முழுவதும் அதை நிகழ்த்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார். எப்பிசோட் ஒளிபரப்பின்போது தனது மகத்தான திறமையின் மீதும், பாரம்பரிய இசை வடிவத்தின் மீதும் தான் கொண்டுள்ள அசைக்க முடியாத பக்திக்காக அவருக்கு ஒரு விருந்தினராக ஷங்கர் மகாதேவன் தலை வணங்கியதைப் போலவே நாமும் தலை வணங்குவோம்.

    பெங்களூருவைச் சேர்ந்த 14 வயது சிரி கிரிஷ் தனது புதிய ராகமான நமோவீனபாணியைப் பாடியபோது, மகாதேவன் அசந்து போனார். அவர் தனது சொந்த கர்நாடக ராகத்தை உருவாக்கிய இளம் பெண் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.

    இதில் எங்களுக்குப் பிடித்த பகுதி என்னவென்றால், அவர்கள் ஒன்றாக வந்தே மாதரம் பாடத் தொடங்கிய போது, அவர்களின் குரல்களைத் தவிர மற்ற அனைத்தும் மங்கிப்போய், அவர்களுடன் சேர்ந்து எங்களையும் பாடும்படி கட்டாயப்படுத்தியது. வேறெதுவும் சொல்வதற்கில்லை, இந்தக் குறிப்பிட்ட தருணத்திற்காகவே நீங்கள் இந்த எப்பிசோடைப் பார்க்க வேண்டும்.

    பார்கின்சன் நோய்க்கு எதிரான ஜூய் கேஸ்கரின் கண்டுபிடிப்புகளுடன் கைகோர்ப்போம்

    தனது மாமாவிற்கு முதல்கட்ட அறிகுறிகள் தோன்றி, பின்னர் அது பார்கின்சன் நோயாகக் கண்டறியப்பட்டதும், இளம் ஜூய் கேஸ்கர் அவருக்காக ஏதாவது செய்யத் தீர்மானித்தார். அவரது கண்டுபிடிப்பு JTremor-3D சாதனத்தின் வடிவத்தில் வந்தது, இது பார்கின்சன் நோயாளிகளின் நடுக்கத்தை அளவிட்டு, தரவை மருத்துவர்களுக்கு அனுப்புகிறது. இதன் மூலம் மருத்துவர் நோயாளிக்கு திறம்பட சிகிச்சையளிக்க முடியும்.

    புனேவைச் சார்ந்த 15 வயது சிறுமி தனது சாதனத்திற்காக ஏராளமான விருதுகளை வென்றுள்ளார், இதில் 2020 ஆம் ஆண்டில் புதுமை மற்றும் படைப்பாற்றலுக்கான டாக்டர் APJ அப்துல் கலாம் தேசிய விருது மற்றும் 2021 ஆம் அண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற Regeneron International Science and Engineering Fair இல் ஷாங்காய் இளைஞர் அறிவியல் கல்வி கண்காட்சியின் சிறப்பு விருதான அறிவியல் விதை விருது ஆகியவை அடங்கும். அது மட்டுமல்லாமல், பார்கின்சன் சங்கம், நோயாளிகளிடமும், மருத்துவர்களிடமும் நோய் குறித்து பேச அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    உலகெங்கிலும் உள்ள பார்கின்சன் நோயாளிகளுக்கு உதவும் JTremor-3D சாதனத்தின் வணிகப் பதிப்பை வெளியிடுவதற்கு முன், கேஸ்கர் தற்போது சாதனத்தின் விலையை மேலும் குறைப்பதற்கும், சட்ட சிக்கல்களைச் சரிசெய்வதற்குமான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

    இந்த மாதிரியான பிரச்சனைகளைத் தீர்க்கும் மனநிலையும், ஒருவரின் சொந்தத் திறமை மற்றும் அந்தத் திறமையின் மீது தான் கொண்டிருக்கும் நம்பிக்கையும்தான், இந்த இளம் மேதைகளை வெளி உலகிற்கு அடையாளப்படுத்தி, பல்வேறு நபர்களின் பாராட்டுகளைப் பெற அவர்களுக்கு உதவுகிறது. இரண்டாவது எப்பிசோட்தான் முடிவடைந்துள்ளது, ஆனால் இதுவரை காட்சிப்படுத்தப்பட்ட சாதனைகள் மற்றும் திறமைகளின் நிலை நம்பமுடியாததாக உள்ளது.

    Network 18 தளத்தில் ஒளிபரப்பப்படவிருக்கும் BYJU’S Young Genius Season 2 இன் இரண்டாவது எப்பிசோடைக் காணத் தவறாதீர்கள்.
    Published by:Selvi M
    First published:

    Tags: BYJU'S, BYJU'S Young Genius

    அடுத்த செய்தி