Home /News /education /

6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஏழு பாடவேளையாக இருந்த தமிழ் பாட வேளை 6 ஆக குறைப்பு...

6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஏழு பாடவேளையாக இருந்த தமிழ் பாட வேளை 6 ஆக குறைப்பு...

மொழி படத்திற்கான முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களின் பாடவேளை குறைக்கப்பட்டுள்ளது.

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, வாரத்திற்கு 7 தமிழ் பாட வேளை என்று இருந்ததை, நடப்பு கல்வி ஆண்டில் 6  பாட வேளையாக குறைத்ததற்கு, தமிழ் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தமிழ் பாட வேளையைக் குறைத்து இருப்பது சரியல்ல என்றும்  பழையபடி மீண்டும் வாரத்திற்கு ஏழு பாடவேளைகள் என்ற நிலையை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடப்பு கல்வியாண்டு கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி துவங்கியது . நடப்பு ஆண்டிற்கான பாடவேளைகள் குறித்த தகவல்களை பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி இருக்கின்றன. அதில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில பாட வேளைகள் குறைக்கப்பட்டு இருக்கின்றன.

வாரத்திற்கு ஏழு பாடவேளைகள் என்று இருந்ததை , ஆறு பாட வேளைகளாக குறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கு கூடுதலாக ஒரு பாடவேளை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன .

Also see... சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மேலும் 10 நாள் தாமதமாக வெளியாகும் என தகவல்..

மேலும் நீதிபோதனை மற்றும் பல்வேறு மன்ற செயல்பாடுகளுக்கும் பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் தமிழ் பாடத்திற்கான பாட வேளையை குறைத்திருப்பது சரியல்ல என்றும், மீண்டும் பழைய படி வாரத்திற்கு ஏழு பாடவேளைகள் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Department of School Education, Tamil language

அடுத்த செய்தி