தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், 2023-24ல் இருந்து படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதிலளித்து பேசினார். அப்போது, மாநிலத்தின் வளர்ச்சியில் திமுக அரசின் தொடர் நடவடிக்கைகளை பட்டியலிட்டு பேசினார்.
காலை உணவுத் திட்டத்தின் மூலம் தனக்கு கிடைத்த நெகிழ்ச்சியான அனுபவத்தை சபையில் பகிர்ந்து கொண்ட தமிழ்நாடு முதல்வர் , "சில வாரங்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த தீபாராணி என்ற ஒரு பெண் முதலமைச்சரின் முகவரி திட்டத்தில் உள்ள சிஎம் ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணில் பேசி இருக்கிறார். பெரும்பாலும் தங்களது தேவைகளை கோரிக்கைகளை, புகார்களை செய்வதற்காகத்தான் அதிலே பலரும் பேசுவார்கள். "உங்களுடைய புகார் என்னம்மா? என்று கேட்டதும், "புகார் சொல்வதற்காக நான் போன் செய்யவில்லை. சி.எம் போன் நம்பர் என்னிடம் இல்லை. சி.எம்.-க்கு நன்றி சொல்வதற்காக போன் செய்தேன்" என்று தீபாராணி என்ற அந்தப் பெண்மணி சொல்லி இருக்கிறார்.
அந்த பெண் தொலைபேசியில், " நான் காய்கறி வியாபாரம் செய்கிறேன். அதனால என் பிள்ளைக்கு காலையில் சாப்பாடு கொடுக்க முடியாது. என் மகன் ஐந்தாவது படிக்கிறான். காலை உணவுத் திட்டத்தின் மூலமாக அவனுக்கு தினமும் காலை உணவு கிடைத்து விடுகிறது. அது தரமானதாக இருக்கிறது. அதுனால் சிஎம்க்கு நன்றி சொல்லணும்” என்று தெரிவித்ததாகவும், அந்தத் தாய் நெகிழ்ச்சியோடு கூறியதுதான் எனக்குக் கிடைத்த பாராட்டு என்றும் முதல்வர் சபையில் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், " முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பெரும்பாலான பொது மக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் பாராட்டப்பட்டு, அதை வரவேற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த முயற்சியின் பயனாக, மகிழ்ச்சியோடு பள்ளிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இந்தத் திட்டத்தினை 2023-2024 ஆம் ஆண்டு, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்திட முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: TN Morning Breakfast Scheme: காலை சிற்றுண்டி உணவுத்திட்டம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15-9-2022 அன்று மதுரையில் தொடங்கப்பட்டது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு முன்னோடி முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் முதற்கட்டமாக, 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 இலட்சம் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளியில் உணவு வழங்கப்பட்டு காலை வருகிறது. தற்போது, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin