அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் (Right To Education) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும். இத்திட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் மே 18ம் தேதிவரை பெறப்படவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 6 முதல் 14 வயதிலான குழந்தைகளின் கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றும் விதமாக 2009ஆம் ஆண்டு மத்திய அரசு அனைவருக்கும் கல்வி உரிமை என்ற சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளும் தங்களின் 25 சதவீத இடங்களை குழந்தைகளின் இலவச கல்விக்காக ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கிறது.
இச்சட்டத்தின்படி ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் இலவசமாக சேர அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மே 18ஆம் தேதி வரை https://rte.tnschools.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களை இணையதளத்தில் பதவிவேற்றம் செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பின் மே 23ஆம் தேதியன்று குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் படிக்க: AI-ல் முதுகலை பட்டப்படிப்பு வழங்கும் ஜியோ கல்வி நிறுவனம் - விண்ணப்பிப்பது எப்படி?
அவ்வாறு தேர்வு செய்யப்படும் குழந்தைகளின் பெயர் பட்டியல் மே 24ஆம் தேதியன்று வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை மே 29ஆம் தேதிக்குள் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு
அனைவருக்கும் கல்வி உரிமை கல்வி சட்டம் குறித்த் போதிய அளவு விழிப்புணர்வு இல்லாததால் கடந்த 3 ஆண்டுகளாக இத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரொனோ காலக்கட்டத்தில் ஏராளமான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் சேர்ந்ததும் இதற்கு மற்றொரு காரணமாக முன்வைக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.