ஹோம் /நியூஸ் /கல்வி /

அரசு அறிவிப்பு எப்போது அமலாகும்.. எதிர்பார்ப்பில் வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவர்கள்

அரசு அறிவிப்பு எப்போது அமலாகும்.. எதிர்பார்ப்பில் வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவர்கள்

மருத்துவ படிப்பு

மருத்துவ படிப்பு

ஆறு ஆண்டு கால மருத்துவ படிப்பை முடித்தும் கூட பயிற்சிக்கான இடம் கிடைக்காததால் தாங்களால் மருத்துவராக பயில முடியவில்லை என மாணவி தீபிகா தெரிவித்தார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெளிநாட்டில் மருத்துவம் பயின்று திரும்பிய மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சிக்கான இடங்கள் ஒதுக்கப்படடு சேர்க்கை கட்டணம் ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்து இரண்டு மாதங்கள் ஆகியும் அமலாகவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் இந்தியாவில் Foreign Medical Graduate Examination என்ற  தேர்வில் தேர்ச்சிப் பெற்று, அதன் பின் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

அப்போது தான் அவர்கள் மருத்துவராக பயில தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகரிக்கும். தமிழ்நாட்டில் இந்த தேர்வில் தேர்ச்சிப் பெற்று பயிற்சிக்கான இடம் கிடைக்காமல் சுமார் 600 மாணவர்கள் காத்திருக்கின்றனர். மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 7.5% இடங்கள் வெளிநாட்டில் படித்த மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சிக்கு ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு வரை 10% ஆக இருந்த இந்த ஒதுக்கீடு இந்த ஆண்டு முதல் 7.5% ஆக தேசிய மருத்துவ ஆணையத்தால் குறைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில்  உள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் கல்லூரிக்கு 150 பேர் வீதம் 1650 மாணவர்களுக்கு  இடம் அளிக்க தமிழக அரசு தேசிய மருத்துவ ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. அதில் 1450 மாணவர்களுக்கு இடம் அளிக்க தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கி உள்ளது. எனவே 1450 இடங்கள் மற்றும் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்கள் சேர்த்து மொத்தம் 1881 மாணவர்கள் பயிற்சி பெற முடியும் என மருத்துவத்துறை அமைச்சர்  மா சுப்ரமணியன் தெரிவித்தார்.

மேலும், மாணவர்களின் சேர்க்கை கட்டணம் ரூ.2.3 லட்சத்திலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுவதாகவும் அறிவித்திருந்தார்.

ஆனால், இந்த அறிவிப்பு இன்னும் அமலாகவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே, பயிற்சிக்கான இடங்கள் கிடைக்காமல் எட்டு மாதங்களாக மன உளைச்சலில் இருக்கும் தாங்கள், இந்த அறிவிப்பு வந்தும் ஒன்பது மாதங்களாக அமலாகாததால் மேலும் அவதிக்குள்ளாவதாக ரஷ்யாவில் படித்து திரும்பியுள்ள செந்தில் தெரிவிக்கிறார்.

இதையும் வாசிக்க20,000 பணிகளுக்கான எஸ்.எஸ்.சி தேர்வு: சேலம் மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்திருந்தாலும் பணம் இல்லாத காரணத்தால் இன்னும் பயிற்சி மேற்கொள்ளவில்லை என திருவள்ளூரை சேர்ந்த மாணவர் காளிதாஸ் தெரிவித்தார். எனவே சேர்க்கை கட்டண தள்ளுபடி அறிவிப்பை உடனே அமல்படுத்த வேண்டும் என அவர் கோருகிறார்.

இதையும் வாசிக்கபொறியியல் முதல் சுற்று கலந்தாய்வு: 269 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

ஆறு ஆண்டு கால மருத்துவ படிப்பை முடித்தும் கூட பயிற்சிக்கான இடம் கிடைக்காததால் தங்களால் மருத்துவராக பயில முடியவில்லை என மாணவி தீபிகா தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வில் தேர்ச்சி பெற்ற 425 பேருக்கும் இன்னும் இடம் கிடைக்காத நிலையில், அடுத்தடுத்து மாணவர்கள் தேர்வு எழுதி பயிற்சிக்கு காத்திருக்கும் மாணவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதாக கூறுகிறார்.

Published by:Salanraj R
First published:

Tags: Medical Admission, Medical College