Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /கல்வி /

அசாத்தியம் என்பது எதுவுமில்லை... அமெரிக்காவில் மேற்படிப்பை திட்டமிடும் இந்திய மாணவர்கள் கவனத்திற்கு..

அசாத்தியம் என்பது எதுவுமில்லை... அமெரிக்காவில் மேற்படிப்பை திட்டமிடும் இந்திய மாணவர்கள் கவனத்திற்கு..

காட்சிப் படம்

காட்சிப் படம்

உயர்க்கல்வியானது, பட்டறிவைத் தாண்டி  கலாச்சார பிணக்கத்தை ஏற்படுத்துவது, உடல், மன ஆரோக்கியத்தை பேணிக் காப்பது போன்ற அடித்தளங்களைக் கொண்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

Higher Studies in US:  ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் தங்கள் மேற்படிப்பை திட்டமிடுகின்ற்னர்.

உதாரணமாக, 2020-21 கல்வியாண்டில் அமெரிக்காவில் பயிலும் பன்னாட்டு மாணவர்களில் ஐந்தில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று சர்வதேச கல்வி நிறுவனம் ஆண்டுதோறும் தயாரிக்கும் Open Doors அறிக்கை தெரிவிக்கிறது.

உயர்கல்வியானது பல்வேறு கூறுகளை கொண்டுள்ளது. தனிமனிதர்களை வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள பல்வகைப் பாடப்பிரிவு, படைப்பாக்கத்திறன், ஆய்வு மனப்பாங்கு, படிப்பு உதவித்தொகை இதில் முக்கியமானதாகும்.

அதே சமயம், சமுதாய மட்டத்தில்  உயர்க்கல்வியானது, பட்டறிவைத் தாண்டி கலாச்சார பிணக்கத்தை ஏற்படுத்துவது, உடல், மன ஆரோக்கியத்தை பேணிக் காப்பது, தொழிற்பண்பட்டவர்களுடன் தொடர்புப்படுத்தும் சூழலியலை உருவாக்குவது போன்ற அடித்தளங்களைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் செயல்படும் உயர்கல்வி நிறுவனங்கள் சர்வதேச மாணவர்களின் தனிமனித மற்றும் சமுதாய நலன்களை பேணிக்காத்து வருகின்றன.

அசாத்தியங்களுக்கான திறவுக்கோல்: அதிக எண்ணிக்கையிலான சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு பரந்துபட்ட உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, 2019-2020 கல்வியாண்டில்  அமெரிக்காவில் 3,900க்கும் மேற்பட்ட முதுநிலை கல்வி நிறுவனங்கள் உள்ளன.

"அமெரிக்காவில் அசாத்தியம் என்பது எதுவுமில்லை" என்று அர்கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுநிலை பட்டம் பெற்ற மாணவி அதிதி லிலி (Aditi Lele)  தெரிவிக்கிறார். இவர், தற்போது, மும்பையில் உள்ள இந்திய- அமெரிக்க கல்வி அறக்கட்டளையின் கல்வி ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

பெரிய, நடுத்தர மற்றும் சிறிய பல்வகைப் பாடப்பிரிவு கொண்ட பல்கலைக்கழகங்கள்/உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  நகர்ப்புறங்களிலும்,  கிராமப்புறங்களிலும் கல்விக்கான அணுகல் கிடைக்கிறது" என்று தெரிவித்தார்.

மேலும், " அங்கு செயல்படும் சமுதாயக் கல்லூரியில், ஏதேனும் பாடப்பிரிவில் ஈராண்டுகள் படித்து இணை பட்டயம் (Association Degree) பெறலாம். பின்பு, மாணவரின் விருப்பதற்கேற்ப, 4 ஆண்டுக் கால பட்டப்படிப்பை முடிக்க உயர்கல்வி நிறுவனங்களில் சேரலாம்" என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் பன்முகக் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள Foothill சமுதாய கல்லூரி உதவியதாக  அர்ஷ் தக்கீர்  தெரிவிக்கிறார். இந்த கல்லூரி, கலிபோர்னியா மாநிலத்தில் லாஸ் அல்டாஸ் குன்றில் அமைந்துள்ளது.

அவர் கூறுகையில், "ஃபுட்ஹில் கல்லூரி என்னை தார்ச்சார்பு கொண்ட மனிதராகவும், வேகமாக மாறிவரும் தன்மைக்கேற்ப  தயார்படுத்திக்கொள்ளவும் உதவியது. கல்வி உள்கட்டமைப்புகள், கற்பித்தல் முறைகள், இதர ஆதரவுகள் காரணமாக சான் டியாகோ நகர அரசு பல்கலைக்காலகட்டத்தில் நான்கு ஆண்டுகால படிப்புக்கு சென்றேன் "என்று தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட துறைகளில் உள்ள நிபுணர்களுடன் பழகுவதற்கான வாய்ப்புகள் மாணவர்களுக்கு அதிகளவு கிடைப்பதாக இந்தியானா மாநிலத்தில், நோட்ரெ டேம் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் படித்துவரும் வைபவ் அரோரா  தெரிவிக்கிறார்.

"வகுப்பறைகளில் கற்றுக்கொண்டதை நிஜ உலக  பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தொழில்துறையில் உள்ளவர்களைச் சந்திப்பதற்கும், நிபுணர்களின் யோசனைகளைப் பெறுவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருந்தன" என்று கூறுகிறார்.

வலுவான வலைப்பின்னல்:  பட்டறிவு படிப்பை நிறைவு செய்த மாணவர்களின் எதிர்கால நலன் சார்ந்த முன்னெடுப்புகளை அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கித் தருவதாக ஆதித்தி லிலி தெரிவிக்கிறார்.

" உயர்தரமான உயர்கல்வியை வழங்குவதற்கம்,   மாணவர்களுக்கு முறையான வாய்ப்பை வழங்குவதற்கும் பல்கலைக்கழகங்கள் வளங்களைத் திரட்டுகின்றன,” என்று அவர் கூறுகிறார்.

அதிநவீன வேலைவாய்ப்பு பயிற்சி மையங்கள், முன்னாள் மாணவர்களின் வலைப் பின்னல்கள்,    உடல் மற்றும் மன ஆரோக்கிய மையங்கள் போன்ற  கூடுதல் வசதிகள் உள்ளன. அவர்கள் தங்கள் மாணவர்களின் உணர்ச்சி நலனில் அக்கறை காட்டுகிறார்கள்.

அமெரிக்காவில் சர்வதேச மாணவர்கள் வரவேற்கத்தக்க சூழலைக் காண்பார்கள்.  பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதில் அமெரிக்க பல்கலைக் கழகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகின் அனைத்து வகையான மக்களையும்  சந்திக்க சிறந்த வாய்ப்பாகவும் அமையும் என்றும் அவர் கூறுகிறார்.

கட்டுரையாளர்: ஸ்டீவ் பாக்ஸ்

First published:

Tags: Education, Higher education