ஹோம் /நியூஸ் /கல்வி /

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை.. நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை.. நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 உதவித்தொகை..

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 உதவித்தொகை..

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவிகள் ஆதார் அட்டை, மாற்று சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • chennai |

நவம்பர் 1 முதல் புதுமைப் பெண் திட்டத்தில் உதவித்தொகை பெறுவதற்கு கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகப் பல கல்வி உதவி திட்டங்களையும் அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்:

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றப்படுவதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

சுய உதவிக் குழுக்கள் தொழில் அமைக்க பயிற்சி: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

முன்னதாக பெண்களுக்குத் திருமண உதவித்தொகையும், தாலிக்குத் தங்கமும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது பெண்கள் உயர்கல்வி பயில ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

புதுமைப் பெண் திட்டம் :

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு அவர்கள் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் புதிய திட்டத்தை கடந்த செப்டம்பர் 5 அன்று முதல்வர் தொடங்கி வைத்தார். அவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை இந்தத் தொகை அவர்களுக்கு வழங்கப்படும். நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். தற்போது வரை கல்லூரிகளில் 2, 3, மற்றும் 4ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகையை பெற்று பயன் அடைந்துள்ளனர்.

யார் விண்ணப்பிக்கலாம்?

6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் தங்கள் கல்லூரியின் முதல் ஆண்டில் விண்ணப்பிக்கலாம்.தற்போது 2,3 மற்றும் 4ம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியிருந்தால் தற்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த தேதியில் இருந்து உதவித்தொகை வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவிகள் உதவித்தொகை பெற http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் பிஎச்.டி. படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லை... மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

மாணவிகள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவிகள் ஆதார் அட்டை, மாற்று சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் உதவிக்கு :

விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 91500 56809, 91500 56805, 91500 56801 மற்றும் 91500 56810 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்

Published by:Ilakkiya GP
First published:

Tags: College girl, Government school, Scholarship