முதலாமாண்டு மாணவர்களுக்கான பொறியியல் வகுப்புகள் நவம்பர் 23-ஆம் தேதி தொடக்கம்.. பருவத் தேர்வுகள் எப்போது?

முதலாமாண்டு மாணவர்களுக்கான பொறியியல் வகுப்புகள் நவம்பர் 23-ஆம் தேதி தொடக்கம்.. பருவத் தேர்வுகள் எப்போது?

அண்ணா பல்கலைக்கழகம்.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கொரோனா தளர்வுகளை அறிவித்ததுடன், பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 16 முதல் செயல்பட அனுமதி அளித்தது.

 • Share this:
  பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 23-ஆம் தேதி தொடங்க உள்ளதாக, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழக அரசு வரும் 16-ஆம் தேதி முதல் கல்லூரிகள் செயல்படலாம் என அனுமதி கொடுத்துள்ளது. இந்நிலையில் தன்னாட்சி அதிகாரம் பெறாத இணைப்புக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கான முதல் செமஸ்டர் வகுப்புகள் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளதாக, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

  கடைசி வேலை நாள் பிப்ரவரி 24-ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

  மேலும் படிக்க...7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு.. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு புதிய சிக்கல்  முதல் செமஸ்டர் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 26-ஆம் தேதியும், செமஸ்டர் தேர்வு மார்ச் 8-ஆம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: