• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்களுக்கு அபராதம்: விமர்சனத்துக்குள்ளான மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நடவடிக்கை

தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்களுக்கு அபராதம்: விமர்சனத்துக்குள்ளான மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நடவடிக்கை

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

  • Share this:
தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்கள் அபராத தொகையுடன் தேர்வுக் கட்டணத்தையும் செலுத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கொரோனோ காலத்திலும் அபராதத் தொகையைச் செலுத்தச் சொல்லியிருக்கும் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுருளியாண்டி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

Also see:



அதில் தேர்வுக் கட்டணத்தை இதுவரை செலுத்தாத மாணவர்கள் வரும் 13 மற்றும் 14ம் தேதிக்குள் அபராதத் தொகையுடன் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் இதற்கான தேதி மீண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா காலத்திலும் அபராதத் தொகையுடன் மாணவர்கள்  தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டுமென பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: