முகப்பு /செய்தி /கல்வி / பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் உயர்வு...!

பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் உயர்வு...!

கோப்பு படம்

கோப்பு படம்

நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் உள்ள சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன இந்த கல்லூரிகளுக்கான கல்வி கட்டணத்தை தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யக்கூடிய குழு நிர்ணயிக்கின்றது.

அந்த வகையில் கட்டண நிர்ணயக் குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார் தற்போது முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 40 பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரக்கூடிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்து தனியார் கல்லூரிகளுக்கு வழங்கியிருக்கின்றது.

இதனை தொடர்ந்து தற்போது 85,000 ரூபாயாக இருக்கும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 1,40,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

ஏற்கனவே பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணத்தை அதிகமாக வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் இருந்து வருகின்றன இந்நிலையில் தற்போது கொரோனோ காலத்தில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Also read... மாற்றமடைந்த புதுவகை கொரோனா வைரஸ் இந்தியாவில் இல்லை: நிபுணர்கள் தகவல்

முதற்கட்டமாக 40 தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பொறியியல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்டமாக இன்னும் சில கல்லிரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Engineering student, Fees