போலி பிஎச்டி பட்டங்களுடன் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் - அண்ணா பல்கலை. ஆய்வு

போலி பிஎச்டி பட்டங்களுடன் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் - அண்ணா பல்கலை. ஆய்வு
  • Share this:
தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் போலியாக பி.எச்டி பட்டங்களை சமர்பித்துள்ள தகவல் விரைவில் தெரிய வரும் என அண்ணாப் பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அண்ணாப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரத்தினை பெற்று செயல்படும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் பணியில் உள்ளவர்கள் போலியாக பிஎச்டி பட்டச் சான்றிதழை அளித்து பணியில் சேர்ந்துள்ளதாக புகார்கள் வந்தன.

அதனைத் தொடரந்து அண்ணாப் பல்கலைக் கழகம் சிலரின் பி.எச்டி சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது அவை போலியானவை என கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது


அதனைத் தொடர்ந்து அனைத்துக் கல்லூரிகளிலும் பணிபுரியும் பேராசிரியா்களின் பிஎச்.டி. பட்டச் சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வதுடன், பேராசிரியர்கள் தாங்கள் பயின்ற சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பி.எச்.டி படித்தற்கான உண்மைத்தன்மைகான சான்றிதழை பெற்று மாா்ச் 16 ந் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணாப் பல்கலைக் கழக தரப்பில் கேட்டபோது, தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களில் 100 க்கு மேற்பட்டவர்கள் போலி பிஎச்.டி. சான்றிதழ்களை அளித்து பணியில் இருந்து வருவது கண்டறியப்பட்டு, சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு செய்தபோது சில தனியார் கல்லூரிகளில் போலி பிஎச்.டி.சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்து உள்ளது தெரியவந்துள்ளது.

.
First published: March 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading