போலி நீட் சான்றிதழ் வழக்கில் புகாருக்கு உள்ளான மாணவி, அவரது தந்தைக்கு சம்மன்

போலி நீட் சான்றிதழ் வழக்கில் புகாருக்கு உள்ளான மாணவி, அவரது தந்தைக்கு சம்மன்

கோப்புப்படம்

போலி நீட் சான்றிதழ் விவகாரத்தில் சான்றிதழ் மட்டுமின்றி அழைப்பு கடிதத்தையும் மாணவி போலியாக தயாரித்து சமர்ப்பித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் நடவடிக்கை என்ன?

 • Share this:
  மருத்துவ கலந்தாய்வில் போலியான நீட் மதிப்பெண் சான்றிதழ் வழங்கி முறைகேடு செய்த மாணவி, போலியான அழைப்பு கடிதத்தையும் சமர்ப்பித்து மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.

  இந்த ஆண்டிற்கான மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நவம்பர் 18ஆம் தேதி முதல் சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 7ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மாணவி தீக் ஷா என்பவர் கலந்து கொண்டார். அவரது சான்றிதழ்களை சரி பார்த்த போது அவர் நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் எடுத்து உள்ளதாக சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில், அவர் நீட் தேர்வில் வெறும் 27 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பதும் போலியான நீட் மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்தார் என்பதும் தெரியவந்தது.

  மேலும் 610 மதிப்பெண்கள் எடுத்த ஹ்ருத்திகா என்ற மாணவியின் பெயரில் உள்ள மதிப்பெண் பட்டியலை எடுத்து அதில் அவரது புகைப்படத்தை அகற்றி விட்டு தனது படத்தை ஒட்டி சான்றிதழ் தயாரித்ததும் அம்பலமானது. மேலும் உண்மையான மதிப்பெண் சான்றிதழில் இருந்த சீரியல் நம்பரை அகற்றிவிட்டு தீக் ஷாவின் சீரியல் நம்பரும் மாற்றப்பட்டது தெரியவந்தது.

  இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரக கூடுதல் இயக்குனர் செல்வராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை பெரியமேடு போலீசார் மாணவி தீக்சா மற்றும் மாணவியின் தந்தை பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் ஏமாற்றுதல், மோசடி செய்தல், போலியான ஆவணங்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  மேலும், செல்வராஜன் அளித்துள்ள புகாரில் மாணவியின் தீக் சாவின் சான்றிதழ்கள் ,மாணவி ஹ்ருத்திகாவின் சான்றிதழ்கள் மற்றும் மற்றொரு மாணவியான மகாலட்சுமி என்ற மாணவி சான்றிதழ் ஆகியவற்றை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

  வழக்கமாக நீட் தேர்வு எழுதி முடித்த மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை நீட் ஆணையம் விதித்திருக்கிறது. அதாவது தேர்வு எழுதிய மாணவியின் பிறந்தநாள் விவரங்கள், அவருடைய சீரியல் எண் விவரங்கள், அவர் பயன்படுத்தக்கூடிய மொபைல் போன் எண்கள், மற்றும் மொபைல் போனுக்கு வரக்கூடிய ரகசிய எண்கள் உள்ளிட்டவற்றை கொடுத்தால்தான் ஒரு மாணவியின் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழை எடுக்க முடியும்.

  மேலும் படிக்க...Gold Rate | இன்று உயர்ந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

  இவ்வாறு இருக்கையில் எப்படி மற்றொரு மாணவி மதிப்பெண்ணை பட்டியலை எடுக்க முடிந்தது? இதுதொடர்பாக யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

  இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பல் மருத்துவர் பாலச்சந்திரன் மற்றும் அவரது மகள் தீக்சா ஆகிய இருவரையும் சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க பெரியமேடு போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கின் தொடர் விசாரணையில், மாணவி சமர்ப்பித்த அழைப்பு கடிதமும் போலி என்பது தெரியவந்துள்ளது.

  தொடர்ந்து மாணவியின் ஸ்கோர் கார்டு, ரேங்க் லிஸ்ட், விண்ணப்பம், நீட் அனுமதி சான்றிதழ் உள்ளிட்ட 10 விதமான ஆவண ஆதாரங்களை மருத்துவ கல்வி இயக்குனரகம் காவல்துறையில் சமர்ப்பித்துள்ளது. போலீசார் அந்த ஆவணங்களை தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர்.

  மாணவிக்காக போலி சான்றிதழ் தயாரித்த பரமக்குடியில் உள்ள கம்யூட்டர் சென்டர் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் மாணவிக்கும், அவரது தந்தைக்கு சம்மன் அனுப்பியது. இதனைதொடர்ந்து இருவரும் சென்னை பெரியமேடு காவல்நிலையத்தில் இன்று ஆஜராக வாய்ப்புள்ளது. தவறினால் கைது செய்யப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்படுவர் என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: