அண்ணா பல்கலைக்கழக வளாக, உறுப்பு கல்லூரிகள்: செமஸ்டர் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..

அண்ணாப் பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பருவத் தேர்விற்கான கட்டணத்தை செலுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாக, உறுப்பு கல்லூரிகள்: செமஸ்டர் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..
அண்ணா பல்கலைக்கழகம்.
  • Share this:
அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாகக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, எம்.ஐ.டி தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடிக் கலை கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் நடப்பு பருவத்திற்கான கல்விக் கட்டணங்களை வருகிற செப்டம்பர் 19 -ஆம் தேதி வரையில கட்டலாம் என கால அவகாசத்தை பல்கலை கழகம் நீடித்துள்ளது.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதேபோல்  அண்ணா பல்கலைக் கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளில்  படிக்கும் மாணவர்கள் இந்தப் பருவத்திற்கான கட்டணத்தை செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் கட்ட வேணடும் என அறிவிக்கப்பட்டது.மேலும் படிக்க...பப்ஜி கேம் விளையாடக்கூடாது என்று கண்டித்த தந்தை, செல்போனைப் பறித்ததால் இளைஞர் தற்கொலை..


ஆனால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
First published: September 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading