உயர்கல்வி மாணவர்கள் உதவித்தொகை விண்ணப்பிக்க, புதுபிக்க கால அவகாசம் நீட்டிப்பு

உயர்கல்வி மாணவர்கள் உதவித்தொகை விண்ணப்பிக்க, புதுபிக்க கால அவகாசம் நீட்டிப்பு

மாதிரி படம்

புதிதான விண்ணப்பங்களை பிப்ரவரி 5ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Share this:
நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் புதிதாக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கவும் ,
ஏற்கனவே உதவித்தொகை பெறுபவர்கள் புதுப்பிப்பதற்கான கால அவகாசமும். நீட்டிக்கப்படுவதாகவும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது..

முதுகலை பயிலும் மாணவிகளுக்கான கல்வித்தொகை, பல்கலைக்கழக அளவில் முதன்மை மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கான கல்விஉதவித்தொகை, வட கிழக்கு மாநிலங்களுக்கான இஷான் உதய் சிறப்பு உதவித்தொகை மற்றும் முதுகலை பயிலும் SC, ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட 4 கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

.அதன்படி மாணவர்கள்.ஜனவரி 20ந் தேதி வரை கல்வித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் , கல்விஉதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை சரிபார்ப்பதுடன் புதிதான விண்ணப்பங்களை பிப்ரவரி 5ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாணவர்கள் தேசிய கல்வித்தொகைக்காக http//scholarships.gov.in  இணையதள பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: